புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளியானது புதுச்சேரியின் இறுதி வாக்காளர் பட்டியல்.. மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

ஜனவரி 1, 2019 தகுதிபெறும் தேதியாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் பணிகள் முடிவடைந்து பட்டியல் வெளியானது.

final voters list released

இறுதி வாக்காளர் பட்டியல்படி 30 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய புதுச்சேரி மாநிலத்தில் மொத்த வாக்காளர் 9 லட்சத்து 59 ஆயிரத்து 566 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 53 ஆயிரத்து 153, பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 6 ஆயிரத்து 320, மூன்றாம் பாலினத்தவர் 93 ஆகும்.

இறுதி வாக்களர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு, வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக அந்தந்த வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ளது.

final voters list released

இதை வாக்காளர் நேரில் சென்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு மக்களவை தொகுதியை கொண்ட புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையிருப்பு உள்ளது.

கடந்த தேர்தலைவிட வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 970 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்த தேவையான அதிகாரிகளை நியமிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் எவை என்பது குறித்து காவல்துறையுடன் இணைந்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.

English summary
Chief Electoral Officer Kandaveli released the final voter list at the Puducherry State Election Commission Office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X