புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2021 புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி.. ரங்கசாமி நம்பிக்கை..

புதுச்சேரி: வரும் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும

Google Oneindia Tamil News

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது. விழாவில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவருமான ரங்கசாமி கலந்துகொண்டு மகளிருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Former chief minister Rangaswamy speech regarding 2021 assembly election

விழாவில் பேசிய ரங்கசாமி, குடும்பத்தை பெண்கள் தான் பொறுப்பாக வழி நடத்தி செல்கிறார்கள். பெண்கள் படித்தால் குடும்பத்தையும், தன்னை சார்ந்தவர்களையும் பார்த்து கொள்வார்கள். நாட்டில் பெண் கல்வி மிக அவசியம் என்றார்.

Former chief minister Rangaswamy speech regarding 2021 assembly election

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் ஆட்சி நடக்கிறதா? ஆளுநர் ஆட்சி நடக்கிறதா? என்பது தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்கும், மாநில நிர்வாகியான ஆளுநருக்கும் இடையே அதிகாரம் யாருக்கு என்பதில் போட்டி நடக்கிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.

Former chief minister Rangaswamy speech regarding 2021 assembly election

இவர்கள் இருவருக்கிடையில் நடைபெற்று வரும் சண்டையால் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்றார். மேலும் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு அறிவித்த எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டத்தை கொண்டுவரவில்லை. மக்கள் கேள்வி எழுப்பினால் பிறர் மீது பழியை போட்டு தப்பித்துக்கொள்கிறார்கள். வரும் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Former chief minister Rangaswamy speech regarding 2021 assembly election
English summary
Former chief minister Rangaswamy speech regarding 2021 assembly election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X