புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு சின்ன மாநிலம்.. ஒரே ஒரு தொகுதி.. அதுக்கு இடைத் தேர்தல்.. 3 கட்சி.. 300 பிரச்சினைகள்!

புதுச்சேரியில் வேட்பாளரை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

புதுச்சேரி: ஒரே ஒரு தொகுதிதான்.. அதற்குத்தான் இடைத் தேர்தல்.. தொகுதியின் பெயரோ காமராஜர் நகர்.. ஆனால் அதற்கு நடக்கும் சண்டை இருக்கே.. அடேங்கப்பா.. ஆச்சரியப்பட வைக்கிறது.. புதுவையில்தான் இந்த பஞ்சாயத்து.

இந்த சண்டையில் மொத்தம் 3 கட்சிகள்.. அந்தப் பக்கம் அதிமுக.. இந்தப் பக்கம் என்ஆர் காங்கிரஸ்.. நடுவில் பாஜக.. இவர்கள் மூன்று பேருமே ஒரே கூட்டணிதான்.. அதில் எந்தக் குழப்பமும் இல்லை. மேட்டர் என்னென்னா யார் தொகுதியில் போட்டி போடுவது என்பதில்தான்.

என்ஆர் காங்கிரஸ் என்ன செய்தது என்றால், நேராக சென்னை வந்து இபிஎஸ், ஓபிஸ்ஸைப் பார்த்து நாங்க போட்டியிடுகிறோம்.. வழக்கம் போல ஆதரவைக் கொடுத்துருங்க என்று எதார்த்தமாக கேட்க, அதிமுகவும் அதனால் என்ன நீங்களே போட்டியிடுங்க என்று பதார்த்தமாக கூறி விட்டது.

அதிமுக

அதிமுக

இதை பாஜக எதிர்பார்க்கவில்லை.. காரணம் அது சீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்ததால். சரி அவங்க தனியா போட்டியிடட்டும்.. நாமளும் வேட்பாளரை நிறுத்துவோம் என்று எண்ணி ஆலோசனையில் குதித்தனர். இதை அதிமுகவும் சரி, என்ஆர் காங்கிரஸும் சரி கண்டுக்கவே இல்லை. தங்களது வேலையில் தீவிரமாக இறங்கி விட்டனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

நாம தனியா நிற்கப் போவதாக சொல்லியுள்ளோமே, சமாதானத்திற்கு வருவார்கள் என பாஜக நினைத்திருந்தது. ஆனால் வராததால் அது ஏமாந்து அதிர்ச்சியாகி விட்டது. அடுத்து என்ன செய்யலாம்.. சரண்டர்தான்.. அதாவது அதிர்ச்சியை வேறு வழியில்லாமல் விழுங்கி விட்டு, என்ஆர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்போம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

சின்னம்

சின்னம்

அதாவது தன்னை வேட்பாளராக அறிவித்து இவர் பிரச்சாரத்திலும் குதித்து விட்டார். விஷயம் என்னவென்றால் இன்னும் வேட்பாளரை என்.ஆர். காங்கிரஸ் அறிவிக்கவே இல்லை. அதற்குள் இவராகவே கிளம்பி விட்டார்.. "போடுங்கம்மா ஓட்டு.. என் சின்னத்தைப் பார்த்து" என்ற கோஷத்துடன். இதனால் அதிமுக கடுப்பாகியுள்ளது.

ரங்கசாமி

ரங்கசாமி

"இதென்னங்க புதுசா இருக்கு.. இப்பத்தான் ஒப்பந்தம் போட்டிருக்கோம்.. வேட்பாளரை அறிவிக்கும் முன்பு இப்படி செய்யலாமா.. அவரை முதல்ல கண்டிச்சு அடக்குங்க" என்று ரங்கசாமிக்கு அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. ரங்கசாமி வழக்கம் போல புன்னகையுடன் இதை எதிர்கொண்டிருக்கிறாராம். ரங்கா சொல்வதை நேரு கேட்பாரா அல்லது உண்மையிலேயே நேருதான் வேட்பாளரா என்பதை வரும் அடுத்த சில மணி நேரங்கள் தெளிவுபடுத்தலாம்.

மூர்த்தி சிறுசுன்னாலும் கீர்த்தி பெருசும்பாங்க.. புதுச்சேரிக்கு அது செம பொருத்தமாக இருக்கிறது.. எவ்வளவு பஞ்சாயத்துகள்.. என்னென்ன சண்டைகள்.. இந்த குட்டி மாநிலத்தில்.

English summary
Puducherry NR Congress is having trouble announcing its candidate in the Kamarajar Nagar By election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X