புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காந்தி ஜெயந்தி - புதுச்சேரியில் காந்தி திருவுருவச் சிலைக்கு ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மரியாதை!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 154-வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 Gandhi Jayanti: Governor, CM pay homage to Gandhi statue in Puducherry

இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள், ஒவ்வொரு ஆண்டும், காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மகாத்மா காந்தியடிகளின் 154-வது பிறந்தநாள், நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான இன்று, அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் அரசு சார்பில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

அந்த வகையில், மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு, அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதுச்சேரி கடற்கரைச்சாலையில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் நமச்ச்சிவாயம், சாய் சரவணன்குமார் உள்ளிடோர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனை தொடர்ந்து காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

 A டூ Z கமிஷன்.! பிரதமரும், முதல்வரும் வாய் திறப்பதில்லை.. ஏன் தெரியுமா! பாயிண்டை பிடித்த ராகுல் A டூ Z கமிஷன்.! பிரதமரும், முதல்வரும் வாய் திறப்பதில்லை.. ஏன் தெரியுமா! பாயிண்டை பிடித்த ராகுல்

இந்நிகழ்ச்சியில் சர்வமத பிரார்த்தனைகள் மற்றும் தேசபக்தி பாடல்களும் இசைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் மற்றும் பல்வேறு இயங்கங்களைச் சேர்ந்தவர்களும், சுதந்திரப் போராட்ட தியாகிகளும், மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

English summary
On the occasion of Mahatma Gandhi's birthday, Lieutenant Governor Tamilisai Soundararajan and CM N Rangaswamy paid respects to Gandhi's statue in Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X