புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனுமதியின்றி துவக்கினால் ஹைட்ரோ கார்பன் திட்ட பணிகளை தடுப்போம்.. புதுவை முதல்வர் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

புதுவை: மாநில அரசின் அனுமதியின்றி புதுவை, காரைக்கால் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தால், அப்பணிகளை தடுத்து நிறுத்துவோம் என புதுவை முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நேரு நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று கட்சியினர் மத்தியில் பேசிய அவர் சுதந்திரத்திற்கு பின் நேருநாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தார். நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அணைகள், மின்நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்ததை நினைவு கூர்ந்தார்

If take hydrocarbon without permission, we will block the tasks.. Narayanasamy confirmed

அண்மையில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கத்திற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என கருதி தான் தேர்தலில் நிறுத்தினோம். கட்சிதலைவர்கள், தொண்டர்கள் இரவு, பகலாக பாடுபட்டதால் அவர் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நம் மீது மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பணியும், பொறுப்பும் நமக்கு உள்ளது என்றார். மோடி மீண்டும் வெற்றி பெற்றவுடன் அனைத்து மாநில வளர்ச்சிக்கும் பாடுபட போவதாகவும், அனைத்து மாநிலங்களுக்கும் மக்கள் நலத்திட்டங்கள் பாகுபாடின்றி நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

முடிவுக்கு வந்ததா முஸ்லீம் ஓட்டு வங்கி? பயம் காட்டும் பாஜக பிரச்சாரத்தில் உண்மையில்லை.. இதோ டேட்டா! முடிவுக்கு வந்ததா முஸ்லீம் ஓட்டு வங்கி? பயம் காட்டும் பாஜக பிரச்சாரத்தில் உண்மையில்லை.. இதோ டேட்டா!

எனவே மோடியை நேரில் சந்தித்து புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையளான நிதி மற்றும் திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை விடுக்க உள்ளதாக கூறினார். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்தால் புதுவை மாநிலம் சார்பாக யாராவது ஒருவரை பங்கேற்க செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

வேதாந்தா நிறுவனத்திற்கு புதுவை, காரைக்கால் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. மாநில அரசு சார்பாக நாம் இதுவரை எவ்வித அனுமதியும் தரவில்லை.

நம் அனுமதி இல்லாமல் நம் மண்ணிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க முடியாது. அப்படி மாநில அரசின் அனுமதி இல்லாமல் பணி ஏதேனும் துவக்கப்பட்டால், அது தடுத்து நிறுத்தப்படும் என உறுதிபட கூறினார். இதே வாக்குறுதியை தாம் சட்டமன்றத்திலும் அளித்துள்ளதாக நாராயணநாமி கூறியுள்ளார்

English summary
puducherry Chief Minister Narayanasamy has categorically stated that if we are trying to implement the Hydro carbon project in the Karaikal area without the permission of the state government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X