புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏழுமலை வீட்டு ஏசியில்.. 3 மாசமா ஓசியில் டேரா போட்ட மிஸ்டர் சாரை!

ஏசி மெஷினுக்குள் 3 மாதமாக சாரைப்பாம்பு ஒன்று தங்கி இருந்தது

Google Oneindia Tamil News

Recommended Video

    வீட்டு ஏசியில்.. 3 மாசமா இருந்த பாம்பு -வீடியோ

    புதுச்சேரி: ஏழுமலை வீட்டை ரொம்ப பிடிச்சு போச்சா.. இல்லேன்னா.. வெயில் மண்டையை பிளந்ததா என்று தெரியவில்லை. அவர் வீட்டு ஏசிக்குள் சாரையார் 3 மாசமாக சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டார்!

    புதுச்சேரி தேங்காய்திட்டுப் பகுதியில் வசித்து வருபவர் ஏழுமலை. இவர் சமூக நலத்துறையில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்க போனார். புழுக்கமாக இருந்ததால், ஏசியை ஆன் செய்திருக்கிறார். அது ஒரு ஸ்பிளிட் ஏசி! திடீரென்று ஏசிக்குள் இருந்து புது தினுசா ஒரு சத்தம் கேட்டது. இதனால் ஏசி ஏதோ ரிப்பேர் ஆகி விட்டது என்று நினைத்து ஆப் செய்துவிட்டு தூங்கிவிட்டார்.

    அந்த பக்கம் அந்த பக்கம் "பாட்ஷா".. இந்த பக்கம் "சின்னம்மா".. என்ன செய்யலாம்.. குழப்பத்தில் தவிக்கும் பாஜக!

    பாம்பு தோல்கள்

    பாம்பு தோல்கள்

    நேற்று காலை ஏசி மெக்கானிக்கை வரவழைத்து என்ன, ஏதென்று பார்க்க சொன்னார். அப்போது, ஏசியை கழற்றிய மெக்கானிக் ஷாக் ஆகி நின்றார். ஏசிக்குள் 3 பாம்பின் தோல்கள் இருந்தன. எப்படி ஏசிக்குள் பாம்பு தோல்கள் வந்திருக்க முடியும் என்று குழம்பியவாறு, அந்த தோல்களை நகர்த்தினார்.

    சாரை பாம்பு

    சாரை பாம்பு

    அப்போது மறைந்திருந்த பாம்பு ஒன்று புஸ்ஸென்று வந்து நின்றது.. 2 அடி நீளம்.. சாரை பாம்பு.. சர்ரக்கென்று ஏசியின் இன்னொரு பக்கத்துக்கு பாய்ந்தது ஓடியது. இதை பார்த்ததும் வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ச்சியானார்கள்.

    பாம்புக்கு காயம்

    பாம்புக்கு காயம்

    உடனடியாக ஏழுமலை வனத்துறைக்கு தகவல் சொல்ல, அவர்களும் விரைந்து வந்தனர். சின்ன ஏசிதான்.. ஆனால் அந்த பாம்பை பிடிக்கவே முடியவில்லை. எங்கே பாம்புக்கு காயம் பட்டுவிடுமோ என்று பக்குவமாக பார்த்து பார்த்து பிடித்து வெளியே எடுக்கவே ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. அதன்பிறகு காட்டில் கொண்டுபோய் பாம்பு விடப்பட்டது.

    பெரிய மரம்

    பெரிய மரம்

    ஆனால் பாம்பு எப்படி ஏசிக்குள் வந்தது என்று பார்த்தால், ஏசிக்கு வெளியில் இருக்கும் அவுட்டோர் யூனிட்டிலிருந்து பைப் லைன் அமைக்க ஒரு ஓட்டை போடுவது வழக்கம். அந்த ஓட்டையை ஏழுமலை அடைக்காமல் அப்படியே விட்டுவிட்டார். அதுக்கு பக்கத்திலேயே ஒரு பெரிய மரமும் இருந்திருக்கிறது. அதிலிருந்து பாம்புதான், அந்த ஓட்டை வழியாக உள்ளே நுழைந்து விட்டிருக்கிறது.

    3 மாதம்

    3 மாதம்

    பாம்பின் தோலை வைத்துதான் அதன் வளர்ச்சி கணக்கிடப்படும். அதன்படி ஏசிக்குள் கிடந்தது 3 தோல்கள் என்பதால், 3 மாசம் ஆகி இருக்கும் எனப்படுகிறது. அதாவது ஏழுமலை வீட்டுக்கு மிஸ்டர் சாரையார் கெஸ்ட்டாக வந்து 3 மாதத்துக்கு மேலாகி இருக்கும் என்று சொல்லப்படுகிறது!

    English summary
    2 feet Snake settled in AC Machine for 3 month near puducheery and forest department official captured it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X