புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க பகுதியில் கொரோனா இருக்கு.. நீங்க பணிக்கு வர வேண்டாம்.. தனிமைப்படுத்தப்பட்ட 21 காவலர்கள்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 21 காவலர்கள் பணிக்கு வர வேண்டுமென காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் டில்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய அரியாங்குப்பத்தை சேர்ந்த 2 பேர் மற்றும் திருவாண்டார்கோவிலை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று முதலில் உறுதி செய்யப்பட்டது.

In Puducherry, 21 policemen have been advised not to work

மேலும் இதில் அரியாங்குப்பம் பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரது உறவினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

In Puducherry, 21 policemen have been advised not to work

இதனிடையே டில்லி சென்று திரும்பியவர்கள் மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

In Puducherry, 21 policemen have been advised not to work

இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 2 இன்ஸ்பெக்டர்கள், ஒரு எஸ்ஐ உட்பட 21 போலீஸார் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இக்காலம் அவர்களுக்கு பணிகாலமாகவே கருதப்படும் என்று சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

In Puducherry, 21 policemen have been advised not to work

இதுதொடர்பாக சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் வெளியிட்டுள்ள உத்தரவில், கொரோனா தொற்று பரவிய மண்டலத்தில் வசிக்கும் 2 இன்ஸ்பெக்டர்கள், ஒரு எஸ்ஐ, போலீஸார், ஐஆர்பின் காவலர்கள் என மொத்தம் 21 பேரை வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். சுகாதாரத்துறை நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பும் தருவார்கள். இந்நாட்கள் அனைத்தும் அவர்கள் பணிநாட்களாகவே கருதப்படும். ஐஆர்பிஎன் காவலர்களுக்கு எப்போதும் தரப்படும் தொகை தரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
In Puducherry, 21 policemen have been advised not to work
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X