புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் வரும்.. ஐசரி கணேஷ்

Google Oneindia Tamil News

Recommended Video

    நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் வரும்.. ஐசரி கணேஷ்

    புதுச்சேரி: நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் வந்தாலும் வரலாம் என்று ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.

    நாடக தந்தை என்று போற்றப்படும் சங்கரதாஸ் அவர்களின் 97-ம் ஆண்டு நினைவு தினம் இன்று புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது.

    isari ganesh expects re election to nadigar sangam

    இதனையொட்டி புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றம், நாடக மன்றத்தினர், மற்றும் நாடக கலைஞர்கள் பேரணியாக அலங்கரித்து வைத்திருந்த சங்கரதாசரின் உருவப்படத்துடன் வாத்திய முழக்கம் மற்றும் பல்வேறு நாடக கலைஞரகள் வேடமணிந்து நாடகக்கலையை வெளிப்படுத்தியும், சங்கரதாஸ் சுவாமிகளின் பெருமைகளை பாடியும், ஆடியும் சாலைகளில் ஊர்வலமாக சென்றனர்.

    ஊர்வலமானது கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள அவரது சமாதியில் முடிந்தது. இதில் திரைப்பட நடிகர்கள் ஐசரி கணேஷ், விக்னேஷ், குட்டி பத்மினி, கணேஷ், உதயா உட்பட திரைப்பட மற்றும் நாடக கலைஞர்கள் கலந்துகொண்டு சங்கதாஸ் சுவாமிகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று புதுச்சேரி அரசு சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து கலந்துகொண்டு சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    isari ganesh expects re election to nadigar sangam

    அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஐசரி கணேஷ், நடந்த முடிந்த நடிகர் சங்க தேர்தலில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்பது எங்கள் தரப்பு புகார்.

    தனி அதிகாரி நியமனத்தில் எனது அழுத்தம் ஏதும் இல்லை என்றும், மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதாகவும், திட்டமிட்டபடி படம் வரும் 29 ந்தேதி படம் வெளியாக உள்ளதென ஐசரி கணேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.

    English summary
    Actor Isari Ganesh has said that he expects a reelection to Naidgar sangam soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X