புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெருங்கி வரும் நிவர்.. காரைக்காலில் இருந்து 30 படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் எங்கே? பரபரப்பு

Google Oneindia Tamil News

புதுச்சேரி: நிவர் புயல் புதுச்சேரியை நெருங்கிக் கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில், காரைக்காலில் இருந்து 30 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இன்னமும் திரும்பவில்லை என்ற தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து நாட்களுக்கு முன்பாக காரைக்காலில் இருந்து 80 படகுகளில் மீனவர்கள், ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இதில் 10 படகுகள் ஏற்கனவே கரை திரும்பி விட்டன. 48 படகுகள் கோடியக்கரை பகுதியில் கரை திரும்பியுள்ளன. 5 மீனவர்களின் படகுகள் ஆந்திராவில் கரை திரும்பின.

Karaikal fishermen who went into sea in 30 boats have to return

இவர்கள் அனைவருமே புயல் எச்சரிக்கையை தொடர்ந்து இவ்வாறு பத்திரமாக கரை திரும்பியுள்ளனர். ஆனால் இன்னமும் 30 படகுகள் எங்குமே கரைக்கு திரும்பவில்லை. இதனால் அவர்களின் குடும்பத்தார் அச்சத்தில் உள்ளனர்.

புதுச்சேரியிலிருந்து 350 கி.மீ தொலைவியில் நிவர் புயல் நெருங்கி வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் உடனடியாக மீனவர்களை கண்டுபிடிக்க அவசியம் ஏற்பட்டுள்ளது.

கொப்பளிக்கும் காசிமேடு கடல்.. ஆளை வெத்தலை போல் மடிச்சி இழுத்து செல்லும் அளவுக்கு வேகம்.. வீடியோகொப்பளிக்கும் காசிமேடு கடல்.. ஆளை வெத்தலை போல் மடிச்சி இழுத்து செல்லும் அளவுக்கு வேகம்.. வீடியோ

இதையடுத்து கடலோர காவல் படையின் உதவியை புதுச்சேரி அரசு நாடியுள்ளது. மீனவர்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்களை கரைக்கு திரும்ப அழைத்து வரும் பொறுப்பை வேகப்படுத்த வேண்டும் என்று அவர்களது குடும்பத்தார் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

English summary
Karaikal fishermen who ventured into sea in 30 boats yet return to the shore, the Puducherry government has asked the Indian coast guard to trace them and rescue them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X