புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம டென்ஷனில் கிரண்பேடி.. செல்போன் காணாமல் போனதால் பரபரப்பு.. நொறுங்கிய நிலையில் மீட்பு!

கிரண்பேடியின் காணாமல் போன செல்போன் கண்டெடுக்கப்பட்டது

Google Oneindia Tamil News

புதுவை: செல்போனை தொலைத்துவிட்டு.. கிரண்பேடி ஆன டென்ஷனை பார்த்து.. உடன் இருந்தவர்களும் பதட்டம் ஆகிவிட்டனர். இதனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டு விட்டது!

வார கடைசி நாட்கள் கிரண்பேடி படு சுறுசுறுப்பாகி விடுவார். கிராமப்புற பகுதிகளில் நீர்நிலைகளை ஆராய்ந்து.. தூய்மை பணிகளை செய்வார்.

புதுச்சேரியின் ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்தே கிரண்பேடி இப்படி செய்து வருகிறார். வார இறுதி நாட்களில் அதிகாரிகளுடன் கண்டிப்பும், கிராம மக்களிடம் நெருக்கத்தையும் காட்டி வருகிறார் கிரண்பேடி.

ஒரே இடத்தில் பால், சிக்கன், முட்டை விற்கக் கூடாதாம்... தள்ளி விற்கணுமாம்.. பாஜக எம்எல்ஏ கோரிக்கை!ஒரே இடத்தில் பால், சிக்கன், முட்டை விற்கக் கூடாதாம்... தள்ளி விற்கணுமாம்.. பாஜக எம்எல்ஏ கோரிக்கை!

கிரண்பேடி

கிரண்பேடி

இன்றும்கூட, அப்படித்தான் பாகூர் ஏரிக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த ஏரிக் கரையோரத்தில் சுமார் 3,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்ட ஆளுநர் கிரண் பேடி, 2 வாரத்திற்கு முன்புதான் அதனை துவக்கி வைத்திருந்தார். அதனால், அந்த ஏரிக்கரையின் ஒரு பகுதியில் இன்று மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

முழக்கம்

முழக்கம்

அந்த விழாவுக்கு காரில் போக முடியாது என்பதால், மாட்டு வண்டியில் கிளம்பினார். மொத்தம் 3 மாட்டு வண்டிகள்.. அதில் ஒரு மாட்டு வண்டியில் ஏறிக் கொண்டார் கிரண்பேடி. பசுமை புதுச்சேரி என்று முழக்கமிட்டுக் கொண்டே மாட்டு வண்டியில் உற்சாகத்துடன் வந்தார்.

உதவியாளர்

உதவியாளர்

ஏரிப்பகுதி என்பதால், வழியில் சேறு நிறைந்த பகுதி வந்தது. இதனால் விழா முடியும்வரை செல்போனை உதவியாளரிடம் கொடுத்துவிட்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் செல்போனை கேட்டார். ஆனால் அந்த செல்போனை காணவில்லை.

அறிவிப்பு

அறிவிப்பு

இதனால் கிரண்பேடி பதற்றம் அடைந்தார். நிறைய தகவல்கள், ஆவணங்கள் அந்த செல்போனில் கிரண்பேடி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. செல்போனை காணாமல் மாட்டு வண்டியில் இருந்து கீழே இறங்கி தேட ஆரம்பித்தார். "யாராவது செல்போனை எடுத்திருந்தாலோ, பார்த்தாலோ தந்துவிடவும்" என்று விழா மேடையில் இருந்த மைக்கிலும் அறிவிக்கப்பட்டது.

நொறுங்கியது

நொறுங்கியது

கிரண்பேடி டென்ஷன் ஆனதை பார்த்ததும், அங்கிருந்தோர் எல்லோருமே ஏரிப்பகுதியில் செல்போனை தேடினார்கள். கடைசியில், அங்கிருந்த வயல் பகுதியில் செல்போன் விழுந்து கிடந்தது. ஆனால் சுக்குநூறாக நொறுங்கி போய்விட்டது. உதவியாளர் தன்னிடம் செல்போன் கொடுத்தபோது, அதை மாட்டு வண்டியில் வைத்துள்ளார். அது வழியில் தெரியாமல் விழுந்துவிடவும், அதன்மீது மாட்டு வண்டி ஏறி... இப்படி உடைந்து விட்டதாக தெரிகிறது. கிரண்பேடி டென்ஷன் ஆனதை பார்த்ததும், அங்கிருந்தோர் எல்லோருமே ஏரிப்பகுதியில் செல்போனை தேடினார்கள். கடைசியில், அங்கிருந்த வயல் பகுதியில் செல்போன் விழுந்து கிடந்தது. ஆனால் சுக்குநூறாக நொறுங்கி போய்வீட்டது. உதவியாளர் தன்னிடம் செல்போன் கொடுத்தபோது, அதை மாட்டு வண்டியில் வைத்துள்ளார். அது வழியில் தெரியாமல் விழுந்துவிடவும், அதன்மீது மாட்டு வண்டி ஏறி... இப்படி உடைந்து விட்டதாக தெரிகிறது.

English summary
Pondicherry governor Kiranbedis cellphone missing and getting tension for one hour
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X