புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாங்க.. ஆளுநர் மாளிகையில் இன்றே ஆலோசிக்கலாம்.. நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு!

ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பேட்டி அளித்து உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    4- ஆவது நாளாக தொடரும் தர்ணா.. வீடியோ

    புதுச்சேரி: இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பேட்டி அளித்து உள்ளார்.

    தொடர்ந்து ஐந்தாவது நாளாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி போராட்டம் நடத்தி வருகிறார்.

    புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மாநில துணை நிலை ஆளுநர் எதிராக இருப்பதாக கூறி முதல்வர் நாராயணசாமி போராடி வருகிறார். இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார்.

    சவால் விட்டார்

    சவால் விட்டார்

    இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து பொதுவில் விவாதம் செய்ய தயாரா என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பேட்டி அளித்து இருந்தார். பொதுவில் ஒரு இடம், நேரம் குறிப்பிட்டு மக்கள் முன்னிலையில் விவாதம் செய்ய முடியுமா என்று கிரண்பேடி சாவல் விடுத்து இருந்தார்.

    பதிலடி

    பதிலடி

    இந்த சவாலை ஏற்றுக்கொண்ட புதுவை முதல்வர் நாராயணசாமி, கிரண்பேடியுடன் நேருக்கு நேர் மோத நாங்கள் தயார். கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன் பொதுமக்கள் மத்தியில் எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என்று குறிப்பிட்டார்.

    பேட்டி அளித்தார்

    பேட்டி அளித்தார்

    இந்த நிலையில் தற்போது இது குறித்து கிரண்பேடி பேட்டியளித்துள்ளார். இன்று மதியம் கிரண்பேடி டெல்லியில் இருந்து புதுச்சேரி திரும்புகிறார். கிரண்பேடி தனது பேட்டியில். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்து இருக்கிறேன். புதுச்சேரி முதல்வருக்கு இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    என்ன விரோதம்

    என்ன விரோதம்

    முதல்வர் நாராயணசாமியுடன் தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை. சட்டத்தின் படி பணியாற்றி வருகிறேன். சட்டத்தில் எனக்குள்ள அதிகார வரம்புக்குள்தான் நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் நான் முதல்வரின் திட்டங்களுக்கு எதிராக பேசுவதாக நாராயணசாமி கூறுகிறார்.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    ஆனால் முதல்வரின் திட்டங்கள் குறித்து ஏன் வெளிப்படையாக எதுவும் அவர் கூறவில்லை.ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டுமே வலியுறுத்தினேன். நான் அரசுக்கு எதிராக எதுவும் பேசவில்லை, என்று கிரண்பேடி தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்

    English summary
    Let's sort out the issues over the discussion, Puducherry Lt.Governor Kiran Bedi calls CM Narayanasamy for the meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X