புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் பால் விலை போல் புதுவையில் பீர் விலை உயர்கிறது.. இதென்ன குடிமகன்களுக்கு வந்த சோதனை

Google Oneindia Tamil News

புதுவை: தமிழகத்தில் பால் விலை உயர்வதை போல் புதுவையில் மதுபானங்களின் விலை உயர்கிறது.

தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் இன்று பால்வளத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என திமுக உறுப்பினர் கே பி பி சாமி கோரிக்கை விடுத்தார்.

Liquor prices in Pondicherry goes high

அப்போது பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தினால், பால் விலையையும் உயர்த்த வேண்டியிருக்கும். இதற்கு திமுக சம்மதித்தால் எங்களுக்கும் சம்மதம் என்றார்.

இதனால் பால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் புதுவையில் மதுபானங்களின் விலை உயர்கிறதாம். இதுகுறித்து புதுவை அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது போல் மதுபானத்தை உயர்த்துவதன் மூலம் வருவாய் கிடைக்கும் என்பது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவாகும். வெளிநாட்டு மதுபானங்கள் தமிழகத்தைவிட புதுவையில் 60 சதவீதம் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் குடிமகன்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். உணவு பொருட்களின் விலைவாசிதான் உயர்ந்திருக்கிறது என்றால் மதுபானத்தின் விலையையும் உயர்த்தியுள்ளார்களே என குடிமகன்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

English summary
Liquor prices in Pondicherry goes high to make bebefit for state people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X