புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காதலர்களுக்கு சலுகை.. காண்டான இந்து முன்னணியினர்.. ஹோட்டல் சூறை.. புதுச்சேரியில் பரபரப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    காதலர்களுக்கு சலுகை.. காண்டான இந்து முன்னணியினர்.. ஹோட்டல் சூறை.. புதுச்சேரியில் பரபரப்பு! - வீடியோ

    புதுச்சேரி: புதுச்சேரியில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் உணவகத்தில் காதலர்களை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அலங்காரப் பொருட்களை இந்து முன்னணியினர் சேதப்படுத்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் போலீசாரின் கெடுபிடியால் சுற்றுலா தளங்கள் காதலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று வழக்கம்தான உற்ச்சாகத்துடன் காதலர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    காதலர் தினத்தையொட்டி காதலர்கள் பரிசுகள் மற்றும் பூங்கொத்துகள் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

     கிப்ட் இருக்கிறது.. எங்களோடு காதலர் தினத்தை கொண்டாடுங்கள்.. மோடிக்கு ஷாகீன் பாக் போராளிகள் அழைப்பு! கிப்ட் இருக்கிறது.. எங்களோடு காதலர் தினத்தை கொண்டாடுங்கள்.. மோடிக்கு ஷாகீன் பாக் போராளிகள் அழைப்பு!

    கொண்டாட்டம் இல்லை

    கொண்டாட்டம் இல்லை

    புதுச்சேரியை பொறுத்தவரை காதலர் தினம் கலையிழந்து காணப்பட்டது. இந்து முன்னணியினர் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் வழக்கமாக கூடும் தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, கடற்கரை, நோணங்குப்பம் படகு இல்லம், உசூடு ஏரி உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் காதலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    சிறப்பு சலுகை

    சிறப்பு சலுகை

    மேலும் காமராஜர் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த இந்து முன்னணியினர் 20 க்கும் மேற்பட்டோர் அந்த ஓட்டல் முன் திரண்டு, அங்கு காதலர்களை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த அலங்காரப் பொருட்களை சேதப்படுத்தி, ஓட்டல் மேலாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

    பெதிக பூங்கொத்து

    பெதிக பூங்கொத்து

    இதனிடையே காதலர் தினத்தை கொண்டாட பாரதி பூங்காவுக்கு வந்த ஒருசில காதலர்களை அழைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    காதலர் தினத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க சுற்றுலாத் தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    அதிருப்தி

    அதிருப்தி

    போலீஸார் இப்படிக் கெடுபிடி செய்ததால் காதலர்கள் அதிருப்தி அடைந்தனர். புதுச்சேரிக்கு எங்கிருந்தெல்லாமோ காதலர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு முக்கிய நகரில் காதலர் தினத்தைக் கொண்டாடுவதில் இப்படி கெடுபிடிகள் காட்டினால் எப்படி என்று அவர்கள் அதிருப்தி அடைந்தனர். இருந்தாலும் பிற மாநிலங்களில் நடப்பது போல பெரிய அளவில் அசம்பாவிதம், தாக்குதல் நடைபெறவில்லை.

    English summary
    Lovers day celebrations in puducherry
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X