புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே நேரத்தில் உடலுறுப்பு தானம் செய்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்.. ஜிப்மரில் நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

புதுவை: நாடு முழுவதுமுள்ள மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள், ஒரே நேரத்தில் தங்களுடைய உடலுறுப்புகளை தானம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நோயாளி ஒருவரது உறவினர்களால், பயிற்சி மருத்துவர்கள் சரமாரியாக தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

More than 100 doctors donate Organs simultaneously at puducherry jipmer

போராட்டம் நடத்தினாலும் தங்களது பங்களிப்பு முழுவதும் மக்களுக்காகவே என்பதை விளக்கும் விதமாக, 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒரே நேரத்தில் தங்களுடைய உடலுறுப்புகளை தானம் செய்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், இன்று வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

More than 100 doctors donate Organs simultaneously at puducherry jipmer

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இன்று ஒரு நாள் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டம் நடந்தது.

மேலும் மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டமானது நடைபெற்றது.

மமதா பேச்சில் திருப்தி.. ஒரு வார கால டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஆகிறது! மமதா பேச்சில் திருப்தி.. ஒரு வார கால டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஆகிறது!

இதனிடையை இன்று நாள் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஜிப்மர் மருத்துவர்கள், தங்களது பங்களிப்பு முழுவதும் மக்களுக்காகவே என்று கூறினர். தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மற்றபடி நாங்கள் என்றும் மக்களுடனேயே இருக்கின்றோம் என குறிப்பிட்டனர் மருத்துவர்கள்.

More than 100 doctors donate Organs simultaneously at puducherry jipmer

மேற்கண்டவாறு சொன்னதோடு மட்டுமல்லாமல், தாங்கள் மக்கள் சேவகர்கள் தான் என்பதை உணர்த்தும் வகையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ரத்ததானம் வழங்கினர்,

மேலும் தாங்கள் இறந்தவுடன் தங்களது உறுப்புகளை தானம் கொடுப்பதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உறுதி பத்திரம் எழுதி கொடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களின் இச்செயலை பலரும் பாராட்டியுள்ளனர்

English summary
Puducherry, Jibmer Hospital, Physical Donation, Doctors, Puducherry Jibmer Doctors, who have been fighting for protection of doctors and doctors all over the country, have donated their bodies simultaneously....
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X