புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாது சுருக்கு வலைக்கு தடையா.. நீங்க தாராளமா வச்சுக்கங்க.. ஓகே சொன்ன நாராயணசாமி!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மீனவர்கள் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என்றும், மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து மத்திய அரசிடம் பேசி தீர்வு காணப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கடலில் மீன் உற்பத்தி வளத்தை குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்குவலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக்கூடாது என மத்திய சட்டம் இயற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Narayana Swamy allows fishermen to use central government banned nets

மத்திய அரசின் தடை உத்தரவினை பின்பற்றி தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, குஜராத், மராட்டியம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் மீனவர்கள் சுருக்குவலை, மடிப்பு வலைகளை பயன்படுத்த தடை சட்டத்தை கொண்டுவந்தன. ஆனால் புதுச்சேரி அரசு சுருக்கு வலை விஷயத்தில் இதுவரை எந்தவித முடிவையும் எடுக்கவில்லை. இதனால் புதுச்சேரியை சேர்ந்த சில மீனவர்கள் சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்தி புதுச்சேரி மீனவர்கள், அண்டை மாநிலமான தமிழக பகுதிக்கு சென்று மீன்பிடிக்கும்போது, அங்குள்ள மீனவர்கள், புதுச்சேரி மீனவர்களுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக - புதுச்சேரி மீனவர்கள் பல சமயங்களில் நடுக்கடலில் கடுமையாக தாக்கிகொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

சீனாவிலிருந்து வரும் பறவைகள்.. கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து.. பொதுமக்களே உஷார்! சீனாவிலிருந்து வரும் பறவைகள்.. கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து.. பொதுமக்களே உஷார்!

மேலும் புதுச்சேரி மீனவர்களின் சுருக்கு வலையை அவ்வப்போது தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தும் வருகின்றனர். இருந்தபோதிலும் இந்த பிரச்சினைக்கு புதுச்சேரி அரசு இதுவரை ஒரு நிரந்தர தீர்வை காண்பதற்கு முன்வரவில்லை. இந்நிலையில்
சுருக்குவலை விவகாரத்தில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு, தீர்வு காண மீனவர் அமைப்பினரிடையே அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.

மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், மீன்வளத் துறை அதிகாரிகள், காவல்துறை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தை ஒரு தரப்பை சேர்ந்த மீனவர்கள் புறக்கணித்தனர்.

கூட்டத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு சுருக்குவலை பயன்படுத்த நாடு முழுவதும் தடை விதித்துள்ள போதிலும், இதனை பல்வேறு மாநில அரசுகள் அமல்படுத்தாமல் உள்ளன. மீனவர்களின் வாழ்வாதாரம் என்பதால் சுருக்குவலை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். அதுவரை புதுச்சேரியில் உள்ள மீனவர்கள் சுருக்குவலை பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என தெரிவித்தார்.

புதுச்சேரியில் பெரிய அளவில் கடல் பரபரப்பு கிடையாது. பெரும்பாலான புதுச்சேரி மீனவர்கள் அண்டை மாநிலமான தமிழக கடற்பகுதியை சார்ந்தே உள்ளனர். நிலைமை இப்படியிருக்க, அண்டை மாநிலமான தமிழகத்தில் சுருக்கு வலையை தடை செய்யும்போது, புதுச்சேரி மாநில மீனவர்கள் எப்படி சுருக்கு வலையை பயன்படுத்த முடியும்? அது எப்படி சாத்தியமாகும்? என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் இதனால் புதுச்சேரி - தமிழக மீனவர்களுக்கிடையே எப்போதும் மோதல் இருந்துகொண்டே இருக்குமென கருத்து தெரிவிக்கின்றனர். அதேபோன்று, புதுச்சேரியில் சுருக்கு வலையை தடை செய்தால், மீனவர்கள் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக மாறிவிடுவார்கள் என்பதால் சுருக்கு வலை விஷயத்தில் முதலமைச்சர் நாராயணசாமி அரசியல் செய்வதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

English summary
Chief Minister Narayana Swamy has granted permission for the Puducherry fishermen to use the central government banned nets
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X