புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலவச அரிசியை விநியோகிக்க முடியலை.. கிரண் பேடி இடைஞ்சலா இருக்கிறார்.. நாராயணசாமி புகார்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய இலவச அரிசியை இந்த மாதம் வழங்க விடாமல் தேர்தல் துறையும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும் தடை செய்துளளதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கம், நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் திறந்த வேனில் இருந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

Narayanasamy asks Puducherry voters to send Modi home

அவருடன் முதல்வர் நாராயணசாமி, தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் பொருப்பாளர் சஞ்சய்தத் உள்ளிட்டோர் அனைத்து தெருக்களிலும் சென்று வாக்கு சேகரித்தனர்.

Narayanasamy asks Puducherry voters to send Modi home

பிரச்சாரத்தின்போது பேசிய முதல்வர் நாராயணசாமி, மாநில அரசின் இலவச அரிசி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டது. அரிசி வந்து 10 நாளாகியும் அதை வினியோகம் செய்ய விடாமல் கிரண்பேடியும், தேர்தல் துறையும் தடையாக இருக்கின்றனர்.

Narayanasamy asks Puducherry voters to send Modi home

தமிழர்களை அவமதிக்கக் கூடிய பாஜக ஆட்சி தொடரலாமா- கனிமொழி கேள்விதமிழர்களை அவமதிக்கக் கூடிய பாஜக ஆட்சி தொடரலாமா- கனிமொழி கேள்வி

காங்கிரஸ் அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கிரண்பேடி செய்யும் சதிச்செயல். குடிதண்ணீர் வரி, மின்சார வரி, குப்பை வரி ஆகியவற்றை உயர்த்தியற்கு கிரண்பேடி தான் காரணம்.

Narayanasamy asks Puducherry voters to send Modi home

ஆகவே மோடி போனால்தான் கிரண்பேடியை இங்கிருந்து அனுப்ப முடியும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் உயர்த்தப்பட்ட குடிநீர், மின்சாரம், உள்ளிட்ட வரிகளை குறைப்போம் என உறுதியளித்த அவர், அதற்கு காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தது ராகுலை பிரதமராக்க வேண்டும் என்றார்.

English summary
Puducherry CM Narayanasamy has urged the people of Puducheery to beat BJP in the coming LS elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X