புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய அரசின் நிதியை பெறுவது மிகப் பெரிய சவாலாக உள்ளது.. புதுவை முதல்வர் வேதனை

Google Oneindia Tamil News

புதுவை: ஆண்டுதோறும் மத்திய அரசின் நிதியைப்பெறுவது மிகப்பெரிய சவாலாக உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி சுதந்திர தின விழாவில் வேதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் 73 வது சுதந்திர தினவிழா புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாநில முதல்வர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி வைத்து காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்த காவலர்கள், பள்ளி - கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்வர் நாராயணசாமி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

100 அடி ஆழம்.. 3 கி.மீ. தூரத்துக்கு ஆழ்கடலில் தேசியக் கொடியை ஏந்திய புதுவை நீச்சல் வீரர்கள் 100 அடி ஆழம்.. 3 கி.மீ. தூரத்துக்கு ஆழ்கடலில் தேசியக் கொடியை ஏந்திய புதுவை நீச்சல் வீரர்கள்

ஆதார் எண்

ஆதார் எண்

இதனையடுத்து பல்வேறு அரசு துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் அலங்கார ஊர்திகளும், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி ஆற்றிய சுதந்திர தின உரையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 96 விழுக்காடு மக்கள் ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்டுள்ளனர்.

காணொலி

காணொலி

தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தென்னிந்தியாவிலேயே வைபை வசதி செய்யப்பட்ட முதல் விற்பனை கூடமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும், புதுச்சேரி பொறியியல் கல்லூரியை புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், கிராமப்புற மருத்துவமனைகளுடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையை இனைத்து சிறப்பான காணொலி மருத்துவ வசதி ஏற்படுத்தப்படும்.

அடையாள அட்டை

அடையாள அட்டை

புதுச்சேரி பகுதியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிட மாணவ, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த மாலை நேர வகுப்புகள் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படவுள்ளது என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரி - கடலூருக்கு இடையே ரயில் போக்குவரத்து திட்டத்தை பெருநகர போக்குவரத்து திட்டத்தின் கீழ் விரைந்து முடிக்க மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

சுதந்திர தினம்

சுதந்திர தினம்

புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.7,416 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், மத்திய அரசு மாநிலத்திற்கு அளித்து வந்த கொடை வெகுவாக குறைத்து விட்டதாகவும், மேலும் ஆண்டுதோறும் மத்திய அரசின் நிதியைப்பெறுவது மிகப்பெரிய சவலாக உருவெடுத்து வருகின்றது. இருப்பினும் இந்த பிரச்சினைகளை தீவிரமாக எதிர்கொண்டு அனைத்து மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக முதல்வர் நாராயணசாமி சுதந்திர தின உரையாற்றினார்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

சுதந்திர தினவிழாவையொட்டி விழா நடைபெறும் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட புதுச்சேரியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

English summary
Pondicherry CM Narayanasamy says that getting fund from Centre is very difficult in Indian Independence day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X