புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதைக் கேளுங்க.. ஜெ. பேச்சைக் காட்டி அதிமுகவினரை வறுத்தெடுத்த நாராயணசாமி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ. பேச்சைக் காட்டி அதிமுகவினரை வறுத்தெடுத்த நாராயணசாமி-வீடியோ

    புதுச்சேரி: என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை துரோகி என்று சொன்னவர் மறைந்த ஜெயலலிதா. ஆனால் அவர்களுடன் போய்க் கூட்டணி சேர்ந்துள்ளனர் சொரணை கெட்ட அதிமுகவினர் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கத்தினை மக்களவை தேர்தலில் வெற்றிபெறச் செய்வதற்காக திமுக சார்பில் உருளையன்பேட்டையிலுள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    Narayanasamy shows Jayas speech

    கிரண் பேடி ஆணா பெண்ணா.. நேற்று நாஞ்சில் சம்பத்.. சூடு சொரணை இல்லாத அதிமுக.. இன்று நாராயணசாமி!கிரண் பேடி ஆணா பெண்ணா.. நேற்று நாஞ்சில் சம்பத்.. சூடு சொரணை இல்லாத அதிமுக.. இன்று நாராயணசாமி!

    இந்த கூட்டத்தில் நாராயணசாமி பேசுகையில், அதிமுக மற்றும் என் ஆர் காங்கிரஸை கடுமையாக சாடினார். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புதுச்சேரியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியபோது என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூட்டணி தர்மத்தை மதிக்காத ஒரு துரோகி என்று கூறினார். ஜெயலலிதா துரோகி என்று கூறியவர்களுடனேயே இப்போது, அதிமுகவினர் தற்போது கூட்டணி வைத்துள்ளனர். நான் கேட்கிறேன், அதிமுகவினருக்கு சூடு, சொரனை இல்லையா என்று கேட்ட அவர் கூடவே ஜெயலலிதா பேச்சையும் மைக்கில் ஒலிபரப்பினார்.

    இதனால் கூட்டத்தில் சலசலப்பும், கலகலப்பும் ஏற்பட்டது. ஜெயலலிதா பேசிய ஆடியோவைக் காட்டி நாராயணசாமி பேசியதால் புதுச்சேரி அரசியல் களம் மேலும் சூடடைந்துள்ளது. அடுத்து எதிர்க்கட்சியினர் என்னவெல்லாம் கொண்டு வந்து களேபரத்தைக் கூட்டப் போகிறார்களோ.

    English summary
    Puducherry CM Narayanasamy showed late Jayalalitha's election speech and condemned ADMK for having alliance with NR Congress.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X