புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐஎஸ்ஐஎஸ்-ஸை ஊக்குவிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை தேவை.. நாராயணசாமி

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி-வீடியோ

    புதுச்சேரி: இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்களுடன் சேர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்.

    ஈஸ்டர் நாள் தாக்குதல்.. இது முதல் முறையல்ல.. ரத்தம் சிந்திய கிறிஸ்தவர்களின் வரலாறு!ஈஸ்டர் நாள் தாக்குதல்.. இது முதல் முறையல்ல.. ரத்தம் சிந்திய கிறிஸ்தவர்களின் வரலாறு!

    இந்த நிகழ்ச்சியின்போது, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஊக்குவிக்ககூடிய நாடுகளை ஐ.நா. சபை கண்டிக்க வேண்டுமெனவும் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.

    Narayanasamy wants severe action against countries supporting ISIS

    இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மதத்தினருடன் சேர்ந்து மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.

    Narayanasamy wants severe action against countries supporting ISIS

    அஞ்சலிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, இலங்கையில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், அனைத்து நாடுகளும் தீவிரவாதத்தினை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

    Narayanasamy wants severe action against countries supporting ISIS

    மேலும் இலங்கைக்கு புதுச்சேரி அரசு உதவ தயாராக உள்ளதாகவும், இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை முழுமையாக தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஊக்குவிக்ககூடிய நாடுகளை ஐ.நா. சபை கண்டிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

    English summary
    Puducherry CM Narayanasamy has urged the UN to take severe action against countries supporting ISIS.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X