புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விவசாயி பலி.. ரமணா ஸ்டைலில் சிகிச்சை.. புதுச்சேரி அரசு மருத்துவமனை மீது புகார்!

Google Oneindia Tamil News

புதுச்சேரி : புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி. இவர் கடந்த ஞாயிறு அன்று குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்து ஆபத்தான நிலையில் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு செயற்கை சுவாச இயந்திரம் வேலை செய்யவில்லை எனக்கூறி அருகில் உள்ள ராணி என்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.

Not enough treatment; complains on Puducherry Kathirkamam Government Hospital

இதனையடுத்து அவரை வழுதாவூர் சாலையில் உள்ள தனியார் (ராணி) மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ராமசாமி உயிரிழந்தார்.

Not enough treatment; complains on Puducherry Kathirkamam Government Hospital

இந்நிலையில், சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை எனவும், ராமசாமி இறந்ததை தெரிவிக்காமல் மருத்துவமனை நிர்வாகம் பணம் கட்ட கூறியதாக உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

Not enough treatment; complains on Puducherry Kathirkamam Government Hospital

மறியல் போராட்டம் அரைமணி நேரமாக நீடித்த நிலையில், அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை அடித்து இழுத்து சென்றதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Not enough treatment; complains on Puducherry Kathirkamam Government Hospital

7 தமிழரை விடுதலை செய்.. பேரறிவாளன் சகோதரி முழக்கம். புதுவையை உலுக்கிய மனித சங்கிலி 7 தமிழரை விடுதலை செய்.. பேரறிவாளன் சகோதரி முழக்கம். புதுவையை உலுக்கிய மனித சங்கிலி

English summary
complains on Puducherry Kathirkamam Government Hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X