புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் வர மாட்டேன்.. என்ன மல்லாடி இப்படி அதிரடியா அறிவிச்சுட்டாரு!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு நடக்க உள்ள தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், சட்டசபையில் தனக்கு நடந்த பாராட்டு விழாவில் அறிவித்து அவரது ஆதரவாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளார்.

Recommended Video

    முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு புதுச்சேரி சட்டசபையில் பாராட்டு விழா - வீடியோ

    தொடர்ந்து 25 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகவும், 3 முறை சிறந்த சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு சட்டசபையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணா ராவ், சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    Not to contest in coming Assembly election says Puducherry Ex Minister Malladi Krishna rao

    புதுச்சேரியின் ஏனாம் தொகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை நடைபெற்ற தேர்தலில் தொடர்ச்சியாக 25 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக மல்லாடி கிருஷ்ணா ராவ் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 3 முறை அமைச்சராக பணியாற்றிய மல்லாடி கிருஷ்ணா ராவ் தற்போது 3 வது முறையாக சிறந்த சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

    இதற்காக புதுச்சேரி சட்டப்சபை சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. சட்டசபை மைய மண்டபத்தில் நடைபெற்ற பாரட்டு விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், என்.ஆர்காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, அதிமுக மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு, வாழ்த்தி பேசினர். தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினர்.

    புதுச்சேரி தேர்தல்: அதிமுக அணிக்கு 14 முதல் 18; காங்- திமுகவுக்கு 12 முதல் 16 இடங்கள்: ஏபிபி சர்வே புதுச்சேரி தேர்தல்: அதிமுக அணிக்கு 14 முதல் 18; காங்- திமுகவுக்கு 12 முதல் 16 இடங்கள்: ஏபிபி சர்வே

    முன்னதாக பேரவையில் பேசிய மல்லாடி கிருஷ்ணா ராவ், வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எனது குடும்பத்தில் இருந்தும் யாரும் போட்டியிட மாட்டார்கள். எனக்கு ஓய்வு தேவைப்படுவதால் அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன். இருப்பினும் மக்கள் சேவையை தொடர்ந்து செய்வேன். துணைநிலை கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன் என்றார்.

    English summary
    Puducherry Ex Minister Malladi Krishna rao announced that he will not to contest in coming Assembly election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X