புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொலை செய்தோம்.. கொள்ளை அடிச்சோம்.. டயர்டா இருந்துச்சா.. டீ போட்டு குடிச்சோம்.. பகீர் சம்பவம்

தம்பதி கொலை வழக்கில் 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    புதுவையில் தம்பதி கொலை , குற்றவாளியின் அதிர வைக்கும் வாக்குமூலம்- வீடியோ

    புதுவை: "கொலை செய்தோம்.. கொள்ளை அடித்தோம்.. ரொம்ப டயர்டா இருந்தது... கிச்சனுக்கு போய் டீ போட்டு குடிச்சோம்" என்று புதுவை தம்பதி கொலை வழக்கில் குற்றவாளி வாக்குமூலம் தந்துள்ளார்.

    புதுவை நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பாலகிருஷ்ணன். இவர் முன்னாள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் சம்பந்தி ஆவார். இவருக்கு 72 வயதாகிறது. இவரது மனைவி ஹேமலதா. இவருக்கு 65 வயதாகிறது. 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    பிள்ளைகளை பாலகிருஷ்ணன் நன்றாக படிக்க வைத்தார் எல்லாருமே வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள். அதனால் கணவன் - மனைவி மட்டும் தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் இவர்கள் ரெண்டு தாக்கி கொலையும் செய்துவிட்டு வீட்டிலிருந்த நகை, பணம் என எல்லாவற்றையும் கொள்ளை அடித்துகொண்டு ஓடிவிட்டனர்.

    விசாரணை வளையம்

    விசாரணை வளையம்

    இது சம்பந்தமாக உருளையன்பேட்டை போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். இந்த கும்பல் யார் என உடனடியாக தெரியவில்லை. அதனால் இதற்கெனவே அதிரடி படையின் உதவி கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையும் தீவிரமானது. இறந்தவர்களின் செல்போன் அழைப்புகள், வீட்டுக்கு வந்தவங்க, போனவங்க, வேலை பார்ப்பவர்கள் என ஒருத்தரை விடவில்லை. எல்லோரையுமே போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தார்கள்.

    செல்போன் தொடர்பு

    செல்போன் தொடர்பு

    எல்லோரிடமும் விசாரணை நடத்தியது போலீஸ். இதில் முக்கியமாக ஒருவரிடம் மட்டும் விசாரணை நடத்த முடியில்லை. செல்போனும் ஸ்விட்ச் ஆப். அவர்தான் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ள கார் டிரைவர். அவர் பெயர் முகமது காசிம். 4 மாசத்துக்கு முன்னாடிதான் வேலையில் சேர்ந்திருக்கிறார். அதனால் அவரது செல்போனை வைத்து எங்கிருக்கிறார் என கண்டறியப்பட்டது. அப்போது கொலை நடந்த வீட்டில்தான் கடைசியாக செல்போன் பயன்படுத்தி இருக்கிறார் டிரைவர்.

    2 டிரைவர்கள்

    2 டிரைவர்கள்

    அதற்கு அப்பறம்தான் ஸ்விட்ச் ஆப். இதையடுத்து இன்னும் தீவிரமாக டிரைவர் பற்றி விவரங்களை ஆராய தொடங்கினர். அப்போது முகமது இலியாஸ் என்பவருடன் அடிக்கடி டிரைவர் பேசிவந்தது தெரியவந்தது. அவரும் ஒரு டிரைவராம். பிறகு அவரது அட்ரஸ் கண்டுபிடித்து போலீசார், மறைந்திருந்து இலியாஸை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் தங்கள் பாணியில் விசாரணையை ஆரம்பித்தனர்.

    வசதி கண்ணை உறுத்தியது

    வசதி கண்ணை உறுத்தியது

    அப்போதுதான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அப்போது அவர் சொன்னதாவது: "வக்கீல் பாலகிருஷ்ணன் ரொம்ப வசதியாக இருக்கவும், கார், பங்களா என இருக்கவும் ரெண்டு பேரும் கொள்ளையடிக்க பிளான் பண்ணினோம். காசிம் என்னை பெட் தைக்க வந்திருப்பதாக பாலகிருஷ்ணனிடம் அறிமுகப்படுத்தினார். உடனே எங்களை பெட் ரூமுக்குள் அனுமதித்தனர்.

    கொலை செய்தோம்

    கொலை செய்தோம்

    அப்போது கணவன் - மனைவி ரெண்டு பேரும் பெட்ரூமுக்குள் வந்தார்கள். உடனே கதவை அடைத்துவிட்டு, இருவரையும் நாங்கள் பலமாக அவர்களை தாக்கினோம். பணம், நகை எங்கே என்று கேட்டோம், அதற்கு அவ்வளவா இல்லை, கொஞ்சமாதான் இருக்கிறது என்று சொன்னார்கள். ஆத்திரமாக வந்தது. அதனால் அவர்களின் கழுத்தை காலால் இறுக்கியும், மார்பில் மிதித்தும் கொன்றோம். அதன்பிறகு சாவியை எடுத்து பீரோவை பார்த்தால், அவர்கள் சொன்னபடியே கொஞ்சம் நகை, பணம்தான் இருந்தது. பெரிசா எதுவும் வீட்டில இல்லை.

    டீ குடிச்சோம்

    டீ குடிச்சோம்

    அதனால் அந்தம்மா கழுத்தில் கிடந்த நகை, வளையலை எடுத்து கொண்டோம். 11.30 மணிக்கு வீட்டுக்குள்ள போனது . இவ்வளவும் செஞ்சு முடிக்க 4 மணி ஆயிடுச்சு. அதனால கிச்சனுக்கு போய் டீ போட்டு குடிச்சோம். ரூமூக்குளேயே சிறுநீர் கழித்தோம். அப்பறம் நைட் நேரா பாண்டிச்சேரிக்கு போய் சரக்கடிச்சோம்" என்றனர். இதையடுத்து 2 டிரைவர்களையும் போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த பொருட்கள், பணத்தையும் கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    English summary
    Old Couple Murder in Puducherry and 2 arrested
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X