புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா எதிரொலி.. ஜிப்மர் மருத்துவமனைக்கு வராதிங்க.. நோயாளிகளுக்கு அறிவுறுத்தல்!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்குமாறு நோயாளிகளுக்கு ஜிப்மர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாத்திரைகள் வாங்கவும் வரவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் சிறிய மருத்துவ உபாதைகளுக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Only patients with critical ailments should visit puducherry Jipmer hospital

இதுகுறித்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை இயக்குநா் ராகேஷ் அகா்வால் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு, நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பெரிய மருத்துவமனைகளில் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

ஜிப்மரில் நாளொன்றுக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையான நோயாளிகளும், அவா்களது உறவினா்களும் வருகின்றனா். ஜிப்மரில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுடன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளும் கலந்திருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் ஜிப்மருக்கு சிகிச்சை வருவோருக்கும் அந்நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

Only patients with critical ailments should visit puducherry Jipmer hospital

எனவே சிறிய உபாதைகளுக்காக ஜிப்மா் மருத்துவமனைக்கு நோயாளிகள் வருவதை கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும். அதேபோல் நீரிழிவு நோய், ரத்த அழுத்த நோய் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு தொடா் மருந்து வாங்க ஜிப்மருக்கு வருவதை நோயாளிகள் தவிா்க்க வேண்டும். அருகிலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் ஜிப்மா் மருத்துவமனை அட்டையை காண்பித்து, மேற்கண்ட மருந்துகளை வாங்கி உட்கொள்ளலாம்.

கொரோனா.. கோவை, பெங்களூரிலிருந்து சென்னை இயக்கப்படும் ரயில்கள் உட்பட 168 ரயில்கள் ரத்து கொரோனா.. கோவை, பெங்களூரிலிருந்து சென்னை இயக்கப்படும் ரயில்கள் உட்பட 168 ரயில்கள் ரத்து

கொரோனா வைரஸ் அபாயம் குறையும் வரை ஜிப்மா் மருத்துவமனை வருவதை தவிா்ப்பது நல்லது. அவசர காரணங்கள் தவிர நாள்பட்ட வியாதிகளுக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான அறுவை சிகிச்சைகளும் கொரோனா அபாயம் குறையும் வரை தள்ளி வைக்கப்படுகின்றன. மிகவும் சிக்கலான உடனடி மருத்துவ உதவி தேவையான நோயாளிகள் மட்டும் ஜிப்மா் மருத்துவமனைக்கு வரலாம்.

மக்கள் நெரிசல் மிகுந்த ஜிப்மரில் நோய்த் தொற்று அபாயம் மிகவும் அதிகம் என்பதை பொதுமக்கள் உணா்ந்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். நோயாளிகளின் உடல்நலத்தை காக்கவே இந்த முடிவை எடுக்க வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Only patients with critical ailments should visit puducherry Jipmer hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X