புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுற்றுலா பயணிகள் இனி "பறக்கலாம்".. புதுச்சேரி சுற்றுலாத் துறை புதிய திட்டம்!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகள் பாரா மோட்டரிங் பலூன் மூலம் வானில் பறந்து இனி புதுச்சேரியின் அழகை ரசிக்கலாம். சுற்றுலா பயணிகளை கவருவதற்காக விரைவில் வருகிறது புதிய திட்டம்.

Recommended Video

    சுற்றுலா பயணிகள் இனி 'பறக்கலாம்'.. புதுச்சேரி சுற்றுலாத் துறை புதிய திட்டம்! - வீடியோ

    சுற்றுலா நகரமான புதுச்சேரியில் அழகிய கடற்கரை, சுண்ணாம்பாறு படகு இல்லம், ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம், ஆரோவில், தாவரவியல் பூங்கா, மணக்குள விநாயகர் ஆலயம், அரவிந்தர் ஆசிரமம், பாரதி பூங்கா, பிரெஞ்சு கால கலைநயமிக்க கட்டிடங்ககள் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.

    இவற்றை சுற்றி பார்ப்பதற்காக கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் நாள்தோறும் ஆயிரகணக்கானோர் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.

    ஹேப்பி புதுச்சேரி

    ஹேப்பி புதுச்சேரி

    மேலும் புதுச்சேரியில் குறைந்த விலையில் கிடைக்கும் மது வகைகளை ருசித்து பார்ப்பதற்கும் ஏராளமான இளசுகள் புதுச்சேரிக்கு படையெடுப்பது வழக்கம். புதுச்சேரியில் சுற்றுலாத் தலங்கள் ஏராளமாக இருந்தாலும், கடற்கரை சார்ந்த சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாகவே உள்ளன.

    மெரீனா போலவே

    மெரீனா போலவே

    இதனால் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை போன்று வம்பாகீரப்பாளையம் பகுதியில் சுமார் 5 கோடி மதிப்பீட்டில் புதிய மணற்பரப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு சுற்றுலாப் பயணிகள் கடற்கரை மணல் பரப்பில் உற்சாகமாக குளித்துவிட்டு, இளைப்பாருவதற்காக 20 கடைகளுடன் கூடிய அழகிய பொழுதுபோக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    பறந்து ரசிக்கலாம்

    பறந்து ரசிக்கலாம்

    இந்நிலையில் புதுச்சேரி மெரினாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மேலும் மகிழ்விப்பதற்காக, பாரா மோட்டரிங் பலூன் மூலம் பறந்து புதுச்சேரியின் ஒட்டுமொத்த அழகையும் ரசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது மோட்டார் மூலம் இயங்கும் இயந்திரத்தை முதுகில் கட்டியபடி ராட்சத பலூனை இணைத்து அதில் பறக்கும்படி செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்கான சோதனையோட்டம் மெரினாவில் தொடங்கப்பட்டுள்ளது.

    3,000 கட்டணம்

    3,000 கட்டணம்

    மேலும் பாரா மோட்டரிங் மூலம் பறக்கும் திட்டம் வரும் ஏப்ரல் மாதம் முதல் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 மீட்டர் வரை, சுமார் 15 நிமிடங்கள் வானில் வட்டமிட்டபடி பறப்பதற்கு 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

    English summary
    Paramotoring has been started in Puducherry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X