புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சளி பிடிச்சிருக்கா.. இருமல் வேற இருக்கா.. சனீஸ்வரர் கோவிலுக்கு வராதீங்க.. அதிரடி உத்தரவு!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: காய்ச்சல், சளி, பாதிப்பு உள்ளவர்கள் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என பக்தர்களுக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recommended Video

    குழந்தைகளுக்கு வைரஸ் பரவாமல் இருக்க இதை கடைபிடிங்க |Some tips to safeguard your children from Corona

    திருநள்ளாற்றில் பிரசித்திப் பெற்ற தா்பாரண்யேசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் தனிச் சன்னிதியில் உள்ள சனீஸ்வர பகவானை தரிசிக்க நாடெங்குமிருந்தும் மற்றும் வெளிநாட்டு பக்தா்கள் வருகின்றனா்.

    People who have cold and coughs are prohibited from visiting Thirunallar Saneeswarar Temple

    கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க வேண்டுமா.. இதோ பயனுள்ள டிப்ஸ் கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க வேண்டுமா.. இதோ பயனுள்ள டிப்ஸ்

    சனிப்பெயா்ச்சி விழாவின்போது லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனத்துக்கு திருநள்ளாறு வருகின்றனா். மேலும் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து தோஷங்களை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

    People who have cold and coughs are prohibited from visiting Thirunallar Saneeswarar Temple

    இந்நிலையில் கொரோனா நோய் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்கள் நாட்டிற்குள் நுழைந்த 28 நாட்களுக்குள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் காய்ச்சல், இருமல், சளி தொல்லை உடையவர்களும் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    People who have cold and coughs are prohibited from visiting Thirunallar Saneeswarar Temple

    இதனிடையே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, அரசு மார்பக புற்றுநோய் மருத்துவமனை மற்றும் பிம்ஸ் தனியார் மருத்துவமனைகளில் மூன்று பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

    People who have cold and coughs are prohibited from visiting Thirunallar Saneeswarar Temple

    ஆய்வு முடிவுகளில் 3 பேருக்கு கொரோனா இல்லை என சுகாதார துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொடர்பாக பீதியில் இருந்த புதுச்சேரி மக்கள் தற்போது நிம்மதியடைந்துள்ளனர்.

    People who have cold and coughs are prohibited from visiting Thirunallar Saneeswarar Temple
    English summary
    People who have colds and coughs are prohibited from visiting the Thirunallar Saneeswarar Temple
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X