புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாமக மாவட்ட செயலாளர் ஓட ஓட வெட்டிக்கொலை... பதைபதைக்க வைக்கும் வீடியோ - 144 தடை

திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா உத்தரவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

காரைக்கால்: திருநாள்ளாறில் பாமக மாவட்ட செயலாளர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கலவரம் பதற்றத்தை தடுக்கும் வகையில் திருநள்ளாறில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    திருநள்ளாறில் பாமக மாவட்ட செயலாளர் ஓட ஓட வெட்டிக்கொலை... பதைபதைக்க வைக்கும் வீடியோ - 144 தடை

    படுகொலை செய்யப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியின் பெயர் தேவமணி என்பதாகும். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த இவர், திருநள்ளாறு தொழிற்சாலைகள் சங்க கௌரவ தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

    தேவமணி நேற்றிரவு திருநள்ளாறு தேரடி பகுதியில் அமைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு உதவியாளருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். அவரை எதிர்பார்த்து காத்திருந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தை மறித்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். தேவமணியின் கை, தலை மற்றும் உடலில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தேவமணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

    சேலத்தில் மசாஜ் சென்டர் அழகி கொலை.. சென்னையைச் சேர்ந்த காதலன் கைது சேலத்தில் மசாஜ் சென்டர் அழகி கொலை.. சென்னையைச் சேர்ந்த காதலன் கைது

    வெட்டி சாய்த்த கும்பல்

    வெட்டி சாய்த்த கும்பல்

    இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தேவமணி இருசக்கர வாகனத்தில் சென்ற போது அவரை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டியது. அதில் இருந்து தப்பிக்க தலை தெறிக்க ஓடுகிறார் தேவமணி. விடாது விரட்டிச்சென்ற கும்பல் அவரை சராமாரியாக வெட்டி சாய்த்தது.

    திருநள்ளாறில் பதற்றம்

    திருநள்ளாறில் பதற்றம்

    தேவமணி படுகொலை செய்யப்பட்டதை அறிந்த அவருடைய ஆதரவாளர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தேவமணியின் சடலத்தை கைப்பற்றிய காரைக்கால் மாவட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கூலிப்படை கொலை

    கூலிப்படை கொலை

    இதுகுறித்து திருநள்ளாறு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக கூலிப்படையை வைத்து யாரோ கொலை செய்திருக்கலாம் காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    காவல்துறை பாதுகாப்பு

    காவல்துறை பாதுகாப்பு

    தேவமணி மீது ஏற்கனவே பலமுறை கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதால் திருநள்ளாறு பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. திருநள்ளாறு சாலை மற்றும் தேவமணி வீடு, கட்சி அலுவலகம் அருகே பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட தேவமணியின் உடல் காரைக்கால் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனை, தேவமணி வீடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருநள்ளாறில் தடை உத்தரவு

    திருநள்ளாறில் தடை உத்தரவு

    பாமக காரைக்கால் மாவட்ட செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்த அவருடைய ஆதரவாளர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனை முன்பு திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதற்றம் மற்றும் கலவரத்தை தடுக்கும் வகையில் திருநள்ளாறில் 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    English summary
    The assassination of the PMK District Secretary in Thirunallar has caused tension. A total of 144 restraining orders have been issued in Thirunallar to quell the riots.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X