புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏடிஎம் லாக்கரை பூட்டாமல் வந்த அதிகாரிகள்.. ரூ. 4 லட்சத்தை 'அபேஸ்' செய்த இளம் பெண்.. அதிரடி கைது

புதுச்சேரியில் ஏடிஎம் மையத்தில், ரூ. 3.90 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்ததாக 28 வயது இளம் பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏடிஎம் மையத்தில், ரூ. 3.90 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்ததாக 28 வயது இளம் பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.

புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது. இதை போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

சி.சி. டிவி காமிரா காட்சி மூலம் கொள்ளையடித்த நபரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

எப்படி?

எப்படி?

ஏடிஎம் எந்திரம் உடைக்கப்படாமல் அழகாக திறக்கப்பட்டு திருடப்பட்டது போலீஸ் அதிகாரிகளுக்கு பெரிய ஆச்சர்யத்தை அளித்தது. இதனால் வங்கி அதிகாரிகள் உதவியுடன் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

பெண் ஒருவர்தான்

பெண் ஒருவர்தான்

சிசிடிவி கேமராவின் உதவியுடன் பெண் ஒருவர்தான் பணத்தை கொள்ளையடித்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் பணத்தை 28 வயது இளம் பெண் சித்ரா என்பவர் கொள்ளையடித்தது தெரியவந்தது.

பணம் நிரப்பினார்கள்

பணம் நிரப்பினார்கள்

இந்த நிலையில் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து போலீசார் அவரை கைது செய்தனர். வங்கி ஊழியர்கள் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் பணம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.ஏ.டி. எம் மையத்தில் பணம் நிரப்பி வைக்கும் பெட்டியில் திருடுபோவதற்கு சில நிமிடத்திற்கு முன்தான் பணம் நிரப்பி இருக்கிறார்கள்.

அட

அட

ஆனால் அந்த பெட்டியை வங்கி ஊழியர்கள் சரியாக பூட்டாமல் அஜாக்கிரதையாக சென்றுள்ளனர்.இதுதான் இந்த கொள்ளைக்கு காரணம் என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிசிடிவி காமிரா காட்சி மூலம் கொள்ளை நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே இளம் பெண் பிடிபட்ட சம்பவம் புதுச்சேரியில் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Police nab a lady who robbed Rs.4 lakhs from the New Bus Stand ATM in Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X