புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா- பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசிடம் சில்மிஷம்- புதுவை எஸ்.பி. அதிரடி சஸ்பெண்ட்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட எஸ்பி சுபாஷை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    கொரோனா பணியில் ஈடுபட்ட பெண் காவலர்களிடம் சேட்டை செய்த எஸ்.பி

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றி வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக, சாலைகள், முக்கிய சந்திப்புகள், சிக்னல், மார்க்கெட் என பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மதகடிப்பட்டு, திருபுவனை உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, ஐ.ஆர்.பி.என் பிரிவு எஸ்.பி சுபாஷ், அங்கு பணியிலிருந்த ஊர்காவல்படை பெண் காவலரிடம் ஆபாசமாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது.

    Police SP suspended in Puducherry

    இதனையடுத்து எஸ்.பி சுபாஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் திருபுவனை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். மேலும் சுபாஷ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போலீஸ் தலைமையகம், புதுச்சேரி உள்துறைக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதல் பெற்று, எஸ்பி சுபாஷை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஊர்காவல்படை வீரரை தாக்கிய போலீஸ் சஸ்பெண்ட்

    Police SP suspended in Puducherry

    இந்நிலையில் மற்றொரு சம்பவத்தில் ஊர்காவல்படை வீரரை தாக்கிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி மூலகுளத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் வெளி நபர்களுக்கு அனுமதி மறுத்து மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

    Police SP suspended in Puducherry

    அங்கு வெளிநபர்கள் உள்ளே செல்லாத வகையில் போலீஸாரும், ஊர்க்காவல் படை வீரர்கள், தன்னார்வலர்களும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கென்னடி நகா் 2 வது குறுக்குத் தெருவைச் சோ்ந்த ஊா்க்காவல் படை வீரா் அசோக்(28) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

    Police SP suspended in Puducherry

    அப்போது மூலக்குளத்துக்கு தனது சொந்த பணி நிமித்தமாக சாதாரண உடையில் வந்த புதுச்சேரி கோரிமேடு காவலா் குடியிருப்பில் வசித்து வரும், லாஸ்பேட்டை காவல் நிலைய காவலா் அரவிந்த்ராஜ், என்பவரை ஊர்க்காவல் படை வீரர் அசோக் தடுத்து நிறுத்தி, அனுமதிக்க மறுத்துள்ளார். இதுதொடா்பாக அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஊா்க்காவல் படை வீரரை, காவலா் அரவிந்தராஜ் அவதூறாகப் பேசி, தாக்கியுள்ளார்.

    Police SP suspended in Puducherry

    இதுகுறித்து அசோக் அளித்த புகாரின் பேரில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் காவலா் அரவிந்த்ராஜ் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்

    ஊர்காவல் படை வீரர், அசோக்கை, காவலர் அரவிந்த்ராஜ் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவலர் ஆரவிந்த்ராஜை பணிநீக்கம் செய்து காவல்துறை தலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    English summary
    Police SP suspended in Puducherry on Monday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X