புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போலியோ முகாம்.. நாராயணசாமி தொடங்கி வைத்தார்.. 91,000 குழந்தைகளுக்கு டிராப்ஸ்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் 452 மையங்களில் 91 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் - புதுச்சேரி எல்லைப் பகுதிகள், சுற்றுலா தளங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

polio drops camp held in puducherry

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட 91 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

போலியோ சொட்டு மருந்து முகாமினை லெனின் வீதியில் உள்ள மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.

மோடி அமைதிக்கானவர் அல்ல; ராகுல் நல்லவர்.. பாக். முன்னாள் அதிபர் முஷரப் பரபரப்பு தகவல் மோடி அமைதிக்கானவர் அல்ல; ராகுல் நல்லவர்.. பாக். முன்னாள் அதிபர் முஷரப் பரபரப்பு தகவல்

polio drops camp held in puducherry

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்கள் மற்றும் மாகி, ஏனாம் பிராந்தியங்களில் மொத்தம் 452 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது. முகாமில் 2000 சுகாதார ஊழியர்கள் சொட்டு மருந்து போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

polio drops camp held in puducherry


மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் சுற்றுலா தலங்கலான கடற்கரைசாலை, மணக்குள விநாயகர் கோவில், தாவரவியல் பூங்கா, ஊசுட்டேரி, சுண்ணாம்பார் படகு குழாம் உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புதுச்சேரி - தமிழகம் எல்லைகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னிகோயில், திருக்கனுார், குருமாம்பேட் ஆகிய 6 இடங்களில் நடமாடும் போலியோ ஊர்தி மூலமும் போலியோ சொட்டு மருந்து போடும் பணி நடைபெற்று வருகிறது.

English summary
CM Narayanasamy started the Polio drops camp in Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X