புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலவச அரிசி விவகாரம்.. காங்கிரஸ் மீது குறை கூற என்ஆர் காங்.கிற்கு தகுதியில்லை- முதல்வர் நாராயணசாமி

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் மீது குறை கூற என்ஆர் காங்.கிற்கு தகுதியில்லை- முதல்வர் நாராயணசாமி-வீடியோ

    புதுவை: இலவச அரிசி வழங்கிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை குறை சொல்ல என் ஆர் காங்கிரஸுக்கு எந்த தகுதியும் இல்லை என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில் புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் இதுவரை 90 சதவீத மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்துள்ளார். மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.

    சீக்கிரம் வாங்க.. யு.எஸ் சென்ற அருண் ஜெட்லியை அவசரமாக அழைத்த மோடி.. இதுதான் காரணம்!சீக்கிரம் வாங்க.. யு.எஸ் சென்ற அருண் ஜெட்லியை அவசரமாக அழைத்த மோடி.. இதுதான் காரணம்!

    இலவச அரிசி

    இலவச அரிசி

    காங்கிரஸ் அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவில்லை என எதிர்கட்சிகள் போலியான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருந்தாலும், கடந்த 3 ஆண்டுகளில் 305 கோடி ரூபாய் அளவிற்கு இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது.

    என் ஆர் காங்கிரஸ்

    என் ஆர் காங்கிரஸ்

    என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும்போது தற்போதுள்ள காங்கிரஸ் அரசு அதிகளவில் அரிசி வழங்கியுள்ளது. இலவச அரிசி வழங்குவதில் ஆளும் காங்கிரஸ் அரசை குற்றம்சாட்டுவதற்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை.

    விநியோகம்

    விநியோகம்

    புதுச்சேரியில் ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி திட்டதை தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி மத்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள இலவச அரிசி, தேர்தல் முடிந்தவுடன் ஏப்ரல் 19-ஆம் தேதிக்கு பிறகு விநியோகிக்கப்படும்.

    அறிக்கை

    அறிக்கை

    மேலும் தேர்தலுக்கு பிறகு அமைச்சரவையை கூட்டி குடிநீர் வரி, மின்சார வரி, வீட்டுவரி, குப்பை வரிகள் குறைக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மற்றும் நீட் தேர்வு ரத்து ஆகியவை காங்கிரஸ் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    தெளிவு

    தெளிவு

    ஆனால் துரதிருஷ்டவசமாக பாஜக தேர்தல் அறிக்கையில் இவை எவையும் குறிப்பிடவில்லை. இதன் மூலம் புதுச்சேரிக்கான உரிமையை தர பாஜக மறுத்துள்ளது என்பது பாஜக தேர்தல் அறிக்கையில் தெளிவாக தெரிகிறது.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிரச்சாரத்திற்கு மக்கள் தாங்களாகவே வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மக்களை தேடி செல்கிறார். அவர் தோல்வி பயம் காரணமாகவே மேகதாது விவகாரத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

    English summary
    Pondicherry CM Narayanasamy criticises N.R.Congress in free rice distribution issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X