புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தர்பார் பாடலுக்கு ஆட்டம் போட்ட கிரண்பேடி.. புதுவை ஆளுநர் மாளிகையில் செம பொங்கல்.. !

Google Oneindia Tamil News

Recommended Video

    புதுவை ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழாவில் தர்பார் பாடலுக்கு ஆட்டம் போட்ட கிரண்பேடி - வீடியோ

    புதுச்சேரி: பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் துப்புரவு தொழிலாளர்களுடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஆடல் பாடலுடன் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

    உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் நேற்று கொண்டாடினர்.

    Pongal celebrations in puducherry rajnivas

    இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துறைவாரியாக அரசு ஊழியர்களை அழைத்து அவர்களுடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

    Pongal celebrations in puducherry rajnivas

    அதேபோன்று இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தூய்மைப் பணி செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களை, ஆளுநர் மாளிகைக்கு அழைத்து, அவர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.

    Pongal celebrations in puducherry rajnivas

    கொண்டாட்டத்தின்போது ரஜினியின் தர்பார் படம், தனுஷ் நடித்த மாரி படத்தின் ரவுடி பேபி பாடல் உள்ளிட்ட திரைப்பட பாடல்கள் போடப்பட்டது. அப்போது ரஜினியின் தர்பார் பட பாடலுக்கு துப்புரவு தொழிலாளர்களுடன் சேர்ந்து கிரண்பேடி நடனமாடி அசத்தினார்.

    நெல்லையில் இடப்பிரச்சினை.. தந்தை, மகள் கொலை.. மகன் கண் முன்னே தாய் கொலையால் சோகம்நெல்லையில் இடப்பிரச்சினை.. தந்தை, மகள் கொலை.. மகன் கண் முன்னே தாய் கொலையால் சோகம்

    கிரண்பேடியின் ஆட்டத்தை, அங்கிருந்தவர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர். இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தால் புதுச்சேரி ஆளுநர் மாளிகையே களை கட்டியிருந்தது.

    English summary
    Pongal celebrations in puducherry rajnivas
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X