புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செல்லூர் ராஜுவை மிஞ்சிய புதுச்சேரி விஞ்ஞானி.. கொட்டும் மழையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி காமெடி

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் கொட்டும் மழையில் நனைந்தபடி அரசு ஊழியர்கள் அங்குள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மா கோல்களை கொண்டு மதுரையில் உள்ள வைணை அணையில் நீர் ஆவியாவதை தடுக்கும் முயற்சியில் இறங்கினார். இதனால் செல்லூர் ராஜூ மிகவும் பிரபலமடைந்தார். தற்போது செல்லூர் ராஜீ எது பேசினாலும் அதை மீம்ஸ் கிரியேட்டர்களும், எதிர்கட்சியினரும் உற்றுநோக்கும் அளவிற்கு செல்லூர் ராஜீவின் வளர்ந்துவிட்டார். சில சமயங்களில் அவர் பேசும் காமெடி பேச்சுக்களாலும், பழமொழிகளாலும் அவர் சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு.

Public servants pouring water on plants in pouring rain

செல்லூர் ராஜீவை மிஞ்சும் அளவிற்கு புதுச்சேரியில் ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது.

புதுச்சேரியின் முக்கிய சுற்றுலாத் தலமாமாக விளங்கும் புதுச்சேரி கடற்கரை சாலையில் இருபுறமும் அழகு செடிகள் மற்றும் மரங்களை நட்டு சுற்றுலாத்துறை மற்றும் பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது.
இந்த செடிகளுக்கு டிராக்டர் மூலம் தினமும் காலை, மாலை என இரு வேலைகளில் அரசு ஊழியர்கள் தண்ணீர் ஊற்றுவது வழக்கம். இந்நிலையில் புதுச்சேரி முழுவதும் இருதினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்த நிலையில், கொட்டும் மழையில் நனைந்தபடி பெண் ஊழியர் ஒருவர் கடற்கரை சாலையில் உள்ள செடிகளுக்கு தண்ணீரை ஊற்றிகொண்டு செல்கிறார். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Public servants pouring water on plants in pouring rain

மேலும் செல்லூர் ராஜுவை மிஞ்சும் அளவிற்கு விஞ்ஞானி ஒருவர் புதுச்சேரியிலும் உள்ளார் என்றும், உங்க கடைமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என அந்த சம்பவத்தை வைத்து சமூக வலைதளங்களில் தற்போது மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

English summary
Public servants pouring water on plants in pouring rain
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X