புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹெல்மெட் அணியாத புதுவை முதல்வர் நாராயணசாமி- வழக்கு பதிவு செய்ய ஆளுநர் கிரண்பேடி உத்தரவு

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுவை யூனியன் பிரதேச ஆளுநர் கிரண் பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்குமான அடுத்த மோதல் வெடித்துள்ளது.

புதுச்சேரி காமராஜர் நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி பிரசார நாளான நேற்று முதல்வர் நாராயணசாமி இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டியபடி வாக்கு சேகரித்தார் நாராயணசாமி.

Pudhucherry Lt Governor Kiran Bedi slams CM NarayanaSamy

அப்போது நாராயணசாமி ஹெல்மெட் அணியவில்லை. நாராயணசாமி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் செய்தித் தாள் படங்களை ஆளுநர் கிரண்பேடி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அத்துடன் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மோட்டார் வாகன சட்டத்தையும் அப்பட்டமாக மீறியிருக்கிறார் நாராயணசாமி என சாடியுள்ளார் கிரண்பேடி. மேலும் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஶ்ரீவத்ஸவாவை கேட்டுக் கொண்டுள்ளார்.

பெருமை.. என்னுடைய பொறுப்புகள் கூடிவிட்டது.. டாக்டர் பட்டம் பெற்ற முதல்வர் பழனிசாமி பேச்சு!பெருமை.. என்னுடைய பொறுப்புகள் கூடிவிட்டது.. டாக்டர் பட்டம் பெற்ற முதல்வர் பழனிசாமி பேச்சு!

தம்முடைய இந்த ட்விட்டர் பதிவை மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கும் டேக் செய்திருக்கிறார் கிரண்பேடி.

யுத்தங்கள் முடிவல்ல!

English summary
Pudhucherry Lt Governor Kiran Bedi tweets that Brazen violation of MV Act and directions of both Honorable Madras High Court & Supreme Court. Rule of Law prevails. DGP Puducherry, Balaji Srivastava, IPS, issues directions for legal action against the defaulters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X