புதுச்சேரி தேர்தல்: அதிமுக அணிக்கு 14 முதல் 18; காங்- திமுகவுக்கு 12 முதல் 16 இடங்கள்: ஏபிபி சர்வே
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் அதிமுக அணிக்கு 14 முதல் 18 இடங்கள் கிடைக்கும் என்று ஏபிபி-சி வோட்டர் சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளன.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக ஏபிபி- சிவோட்டர் கருத்து கணிப்புகள் நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்கிறது இந்த கருத்து கணிப்பு. புதுச்சேரியில் அதிமுக அணிக்குதான் அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறது சிவோட்டர் சர்வே.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு காத்திருக்கும் பேரிடி.. சி வோட்டர் கருத்து கணிப்பு!
புதுச்சேரி கருத்து கணிப்பு முடிவுகள்:
- திமுக- காங்கிரஸ் அணி 12 முதல் 16 இடங்கள் (42.6% வாக்குகள்)
- அதிமுக அணி 14 முதல் 18 இடங்கள் (44.4% வாக்குகள்)
- மநீம- 2.3% வாக்குகள்