புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நியமன உறுப்பினர்களை வாக்களிக்க அனுமதித்தது தவறு.. நாங்கள்தான் மெஜாரிட்டி- அமைச்சர் கந்தசாமி

Google Oneindia Tamil News

புதுச்சேரி: நியமன உறுப்பினர்களை வாக்களிக்க அனுமதித்தது தவறு என்று புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

துணை நிலை ஆளுநர் உத்தரவையடுத்து, புதுச்சேரி சட்டசபையில் நாராயணசாமி அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளது. அதேநேரம், தங்களுக்கு போதிய அளவுக்கு எம்எல்ஏக்கள் பலம் இல்லை என்பது ஆளும் தரப்பு உணர்ந்து இருக்கிறது.

இதை, அமைச்சர் கந்தசாமி இன்று காலை அளித்த பேட்டி உறுதி செய்வதாக இருக்கிறது.

இது சும்மா டிரெய்லர்தான்.. இது சும்மா டிரெய்லர்தான்.. "இன்று புதுச்சேரி.. நாளை தமிழ்நாடு".. இதுக்கெல்லாம் ஒரே வழி "அது"தான்..!

தமிழிசைக்கு வாழ்த்து

தமிழிசைக்கு வாழ்த்து

கந்தசாமி கூறியதாவது: தமிழிசை சௌந்தர்ராஜன் துணை நிலை ஆளுநராக தமிழில் பதவி பிரமாணம் செய்து கொண்டார். இதுவரை புதுச்சேரி வரலாற்றில் அனைவரும் ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் செய்தனர். தமிழிசை தமிழ் மொழியில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

நாங்கள்தான் பெரும்பான்மை

நாங்கள்தான் பெரும்பான்மை

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் 12 பேர் உள்ளோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சியினர் 11 பேர் இருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் நாங்கள்தான் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டுள்ளோம். ஆனால், நியமன உறுப்பினர்கள் மூன்றுபேரை வாக்களிக்க அனுமதி அளித்துள்ளனர்.

ராஜினாமா

ராஜினாமா

ஒருவேளை நியமன உறுப்பினர்களை வாக்களிக்க அனுமதித்தால், சட்டசபையை கூட்டி பாஜக அரசு என்னவெல்லாம் இந்த ஆட்சிக்கு எதிராக செய்ததோ அதைப் பற்றி முதல்வர் நாராயணசாமி உரையாற்றுவார். அதன்பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு முன்பாகவே ராஜினாமா சமர்ப்பித்து விடுவோம். நியமன உறுப்பினர்களை வாக்களிக்க அனுமதித்தது ஜனநாயக விரோதம் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வோம். இவ்வாறு அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திட்டம்

திட்டம்

இரு தினங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு கருத்தை ரங்கசாமி கூறினார். ஆனால் நாராயணசாமி அவர் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று தெரிவித்தார். ஆனால் இன்றுள்ள நிலைமையில், அமைச்சர் கூறுவதுதான் நடக்கப் போகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

நாராயணசாமி முயற்சி

நாராயணசாமி முயற்சி

கடைசி நேரத்தில் நாராயணசாமி உருக்கமாக பேசுவதன் மூலமாக, மக்கள் மத்தியில் அனுதாபம் ஏற்படுத்த முடியுமா என்று முயற்சி செய்து பார்ப்பார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆனால் இது காலம் கடந்த முயற்சி என்று கூறக்கூடிய அரசியல் விமர்சகர்களும் இருக்கிறார்கள்.

English summary
Puducherry CM Narayanasamy is facing no confident motion, due to allowing appointed MLAs says minister Kandasamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X