புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் கண்டிப்பாக எதிர்ப்போம்: புதுவை முதல்வர் நாராயணசாமி

Google Oneindia Tamil News

புதுச்சேரி: மத்திய அரசு மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் புதுச்சேரி மாநிலம் கண்டிப்பாக எதிர்க்கும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா தொற்றால் 2020-21 ஆம் ஆண்டு நாட்டின் வளர்ச்சியை கணக்கிட முடியாது என்று நிதி அமைச்சர் கூறுகிறார். ஆனால், ரிசர்வ் வங்கி தலைவர் அளித்த பேட்டியில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி பின்நோக்கி செல்லும், இவ்வளவு அறிவிப்புகள் அறிவித்தால் கூட அது பொருளாதார மேம்பாட்டுக்கு பயன்படாது என்று கூறியுள்ளார். இருவரின் முரண்படான கருத்து மக்களிடையே குழப்பத்தை உருவாக்கி இருக்கிறது. இதனை தவிர்க்க வேண்டும். இருவரும் ஒரே கருத்தை பிரதிபலிக்க வேண்டும். குறிப்பாக, பொருளாதார வல்லுநர்கள் கூறுவதை தெளிவுபட கேட்டு அறிவிப்புகளை மாற்ற வேண்டும். யூனியன் பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது என்ற அறவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார். விவசாயிகளுக்கு சலுகைகள், ஏழை மக்களுக்கு மின்சார சலுகைகள் கொடுப்பதை மாநில அரசுகள் பணமாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Puducherry CM Narayanasamy Opposes to Power Sector to Private

தொடர்ந்து பல ஆண்டுகளாக புதுச்சேரி, தமிழகம், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை நிறைவேற்றி வருகிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும், விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்பதை கருத்தில் கொண்டு நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு சலுகைள் வழங்கப்பட்டு வருகிறது. மின்சார விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் இதுபோன்ற இலவச மின்சார திட்டத்தை நிறைவேற்றுவது ஏமாற்றமாகவும், சவாலாகவும் இருக்கும். தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்றார் போல் மின்கட்டணத்தை உயர்த்திக்கொள்வார்கள். இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக நான் பிரதமருக்கு கடிதம் எழுதி, தற்போது இருக்கின்ற நிலையிலேயே இருக்க வேண்டும். மின்துறையை தனியார் மயமாக்குவதால் மாநிலத்துக்கு எந்தவித பலனும் இல்லை. மின்சாரம் மத்திய, மாநில பட்டியலில் இணைந்துள்ளது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு நிறைவேற்றக் கூடாது. நிறைவேற்றினால் புதுச்சேரி மாநிலம் கண்டிப்பாக எதிர்க்கும் என்று கூறியிருந்தேன். ஆனாலும் இதுவரை பிரதமரிடம் இருந்து எந்த பதில் வரவில்லை.

புதுவையில் நாளை முதல் மதுபானக் கடைகள் ஓபன்.. சரக்கு விலையை கேட்டாலே கிர்... கிர்ர்தான்புதுவையில் நாளை முதல் மதுபானக் கடைகள் ஓபன்.. சரக்கு விலையை கேட்டாலே கிர்... கிர்ர்தான்

புதுச்சேரி மாநிலத்தின் கொள்கை மின்சாரத்தை, மின்சார விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பது தான். கொரோனா சமயத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நிதி ஆதாரத்தை கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யக் கூடாது. மாநிலங்களுக்கு கடுமையான விதிகளை போட்டு காலதாமதம் ஏற்படுத்தாமல் கொரோனாவை எதிர்த்து போராடும் சமயத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் மாநில மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்ற முடியும். புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க ஆதரவும் இருக்கிறது. எதிர்ப்பும் இருக்கிறது. ஆனால் நம்முடைய மாநிலத்தில் மதுக்கடைகள் மூலம் குறிப்பிட்ட வருவாய் வருவதன் மூலமாகத்தான் பட்ஜெட்டையும், மக்கள் நலத்திட்டங்களையும் நிறைவேற்ற முடிகிறது. புதுச்சேரியை பொருத்தவரையில் மற்ற மாநிலங்களை விட மதுபானங்களின் விலை குறைவாக உள்ளது. மதுக்கடை திறப்பது சம்மந்தமான கோப்பை நாங்கள் தயாரித்து துணை நிலை ஆளுநருக்கு அனுப்பினோம். இதில் அவருடைய கருத்து மாறுபாடாக இருந்தது. ஆகவே இரண்டு முறை எங்கள் அமைச்சரவையில் பேசி மதுக்கடைகளை திறக்க முடிவு எடுத்தோம்.

Puducherry CM Narayanasamy Opposes to Power Sector to Private

தமிழகம், புதுச்சேரிக்கு ஏற்றார் போல் உள்ள மதுக்களுக்கு ஒரே விலையை நிர்ணயம் செய்து அதற்கான கோப்பை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பினோம். அதற்கான ஒப்புதல் வந்துள்ளது. மாகே, ஏனாம் பிராந்தியங்களில் மதுக்கடைகள் திறப்பதற்கான கோப்பை இன்று அனுப்புகிறோம். அதற்கும் ஒப்புதல் வரும். இது அரசிதழில் வெளியிடப்படும். இதன் மூலம் மதுக்கடைகள் திறப்பதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும். கடந்த ஒருவாரமாக மதுக்கடைகள் திறக்காததால் மாநிலத்துக்கு வருகின்ற வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்கான ஒப்புதலை ஆளுநர் இப்போது அளித்துள்ளார். அடுத்த வாரம் முதல் அரிசி வழங்குவோம். தமிழக அரசால் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். அவர் தமிழக அரசுக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்களை நீமன்றத்தில் கூறி வெற்றி பெற்றுள்ளார்.

Puducherry CM Narayanasamy Opposes to Power Sector to Private

அதனால் ஏற் பட்ட காழ்புணர்ச்சி காரணமாக அவர் மீது பொய்யான வழக்கை போட்டுள்ளனர். அவர் கூட்டத்தில் பேசும்போது ஒரு சமுதாயத்தை தவறாக பேசியதாக கூறியுள்ளனர். தமிழக அரசானது அதனை தீர விசாரித்து அதன்பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து காழ்புணர்ச்சி காரணமாக பொய்வழக்கு போடுவது, காலை நேரத்தில் சென்று கைது செய்வது அதிகார துஷ்பிரயோகமாகும். இது தவிர்க்கப்பட வேண்டும். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. நிச்சயம் அவர் குற்றவாளி இல்லை என்பதை நிரூபித்து வெளியே வருவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இவ்வாறு முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

English summary
Puducherry state chief minister V.Narayanasamy press conference regarding coronavirus update
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X