புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரி ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக நாராயணசாமி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு

By Sivam
Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டுமென ஆளுநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யகோரி அம்மாநில முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என முதலமைச்சர் நாரயணசாமி, தெரிவித்திருந்தார் இதனை ஏற்க மறுத்த துணைநிலை ஆளுனர் கிரண்பேடி இந்த விவகாரத்தில் மோசடியை தடுக்கும் வகையில் அரிசிக்கு பதிலாக பணத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்

Puducherry CM Narayanasamys case against the orders of the Puducherry Governor

இறுதி முடிவு வரும் வரை தற்போதைய நடைமுறைப்படி அரிசிக்கான பணத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்தான வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதி, புதுச்சேரி முதல்வர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று உத்தரவிட்டு அடுத்தகட்ட விசாரணைக்காக வழக்கை பட்டியலிடுமாறு உத்தரவிட்டார்.

நிஜமாவே கட்சி ஆரம்பிக்க போறாரா ரஜினி.. நேற்று தர்பார் ரிலீஸ்.. இன்று நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை! நிஜமாவே கட்சி ஆரம்பிக்க போறாரா ரஜினி.. நேற்று தர்பார் ரிலீஸ்.. இன்று நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை!

English summary
Puducherry CM Narayanasamy's case against the orders of the Puducherry Governor, hc accepted to qnquery
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X