புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரி: துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக விடிய விடிய முதல்வர் நாராயணசாமி போராட்டம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்து துணை நிலை ஆளுநர் புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் முதல்வர் நாராயணசாமி விடிய விடிய சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Google Oneindia Tamil News

புதுச்சேரி: துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாட்டைக் கண்டித்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் இரவிலும் சாலையில் படுத்து உறங்கி போராட்டத்தை தொடர்ந்தனர். தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பானிபூரி, ஆம்லெட், ஆஃப்பாயில் விநியோகம் செய்யப்பட்டது.

Recommended Video

    புதுச்சேரி: திரும்பிப்போ கிரண்பேடியே... நடக்கும் போராட்டம்.. மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது..!

    புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்து துணை நிலை ஆளுநர் புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் அண்ணா சதுக்கம் அருகே நேற்று காலை முதல் தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

     Puducherry CM protest seeking recall of Lt Governor Kiran Bedi

    முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இரவு நேரத்திலும் அங்கேயே சாப்பிட்டு முதல்வர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டார். அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமன், ஜெயமூர்த்தி, ஜான்குமார், மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோர் அங்கேயே தார்பாய் விரித்து உறங்க தொடங்கினர். தொடர்போராட்டம் எனபதால் நிர்வாகிகள் அனைவரும் அங்கேயே தொடர்ந்து போராட்டம் நடத்தவும் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்நிலையில் தொண்டர்களை உற்ச்சாகப்படுத்தும் வகையில் போராட்ட களத்தில் பானிபூரி, பூரி மசாலா, ஆம்லெட், ஆஃப்பாயில் உள்ளிட்டவைகளோடு உணவு பரிமாறப்பட்டு வருகின்றது. போராட்டம் இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாய் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

    துணைநிலை ஆளுநரின் எதிரான போராட்டம் நடத்தும் இடத்தில் 200க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் மற்றும் முற்றுகை போராட்டத்தை காக்கும் வகையில் வஜ்ரா வாகனம் மற்றும் நீர் பீச்சி அடிக்கும் வாகனம் ஆகியவைகளை கொண்டு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    English summary
    Puducherry CM protested seeking recall of Lt Governor Kiran Bedi. Chief Minister Narayanasamy and the ministers slept on the road at night and continued their struggle. Panipuri, Omelette and Half boiled eggs were also distributed to cheer up the volunteers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X