புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தோல்வி பயத்தால் 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் எடப்பாடி அரசு.. புதுவை முதல்வர்

தோல்வி பயத்தால் 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் எடப்பாடி அரசு.. புதுவை முதல்வர்

Google Oneindia Tamil News

Recommended Video

    தோல்வி பயத்தால் 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் எடப்பாடி அரசு

    புதுவை: தேர்தல் தோல்வி பயத்தில் எடப்பாடி அரசு தகுதிநீக்க விவகாரத்தில் சபாநாயகர் முடிவு செய்திருப்பது ஜனநாயக படுகொலை என மதுரையில் புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி தெரிவித்தார்.

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்ய வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

    நடைபெற்ற தேர்தலில் தமிழக மற்றும் புதுச்சேரி மக்களின் மனநிலை மோடிக்கு எதிராக இருந்தது - மோடி ஆட்சியில் எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை மோடி அரசு வழங்கவில்லை.

    உளவுத்துறை எச்சரிக்கை... தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு... தீவிர கண்காணிப்பு உளவுத்துறை எச்சரிக்கை... தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு... தீவிர கண்காணிப்பு

    உரிமைகள் மீட்கப்படும்

    உரிமைகள் மீட்கப்படும்

    மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதால் மோடியை தூக்கி எரிய தயாராகி வாக்களித்துள்ளனர். ராகுல்காந்தி பிரதமர் ஆனால் தான் தென் மாநிலத்தின் உரிமைகள் மீட்கப்படும் என்ற எண்ணத்தில் வாக்களித்துள்ளனர்.

    தமிழக மக்கள்

    தமிழக மக்கள்

    அனைத்து தொகுதிகளிலும் திமுக - காங் கூட்டணி வெற்றி உறுதி. தமிழக மக்கள் மோடி எடப்படியை நிராகரித்து வாக்களித்துள்ளனர். சாதகமாக அமையும். 4 தொகுதி இடைத்தேர்தலிலும் வெல்வோம். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும். மோடி தமிழகத்தை புறக்கணித்துவிட்டார் என்பதை தமிழக மக்கள் புரிந்து வாக்களித்துள்ளனர்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    ஃபனி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பேரிடர் மீட்புதுறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் தயாராக உள்ளனர். சபாநாயகர் தனி அதிகாரம் பெற்றவர். ஸ்டாலின் அறிக்கையை பார்க்கும் போது தோல்விபயம் வந்து இது போன்ற நடவடிக்கைகளை அதிமுக அரசு செய்துவருகிறது.

    தன்னிச்சை

    தன்னிச்சை

    சபாநாயகர் எல்லை மீறி நடக்ககூடாது என்பது தெரிகிறது. 18எம்எல்ஏ விவகாரத்தில் கட்சிமாறி செயல்பட்டதாக கூறி விதிமுறைகள்படி நடவடிக்கை எடுக்கவில்லை. ஜனநாயக படுகொலையை தன்னிச்சையாக முடிவு செய்துள்ளார்.

    கேரளத்தில் போட்டி

    கேரளத்தில் போட்டி

    சட்டபேரவையில் திமுக கூட்டணிக்கு அருதி பெரும்பான்மை கிடைக்கும். ஓபிஎஸ் வாரணாசிக்கு சென்று எந்த மொழியில் பேசினார். கட்சி முடிவெடுக்கவில்லை என்பதால் வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை. தென்மாநிலங்களை மோடி புறக்கணித்த காரணத்தினால் ராகுல்காந்தி கேரளாவில் போட்டியிடுகிறார் என்றார் நாராயணசாமி.

    English summary
    Puducherry CM Narayanasamy says that Edappadi Government has afraid of election results. He also condemns for taking steps to disqualify 3 ADMK MLAs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X