புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ தனவேலுவிடம் சபாநாயகர் விசாரணை.. புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு

Google Oneindia Tamil News

புதுச்சேரி: காங்கிரஸ் கட்சி தூள்தூளாகி விடும் என அதிருப்தி அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் பட்டியலை வெளியிட்டு காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ தனவேலு பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பாகூர் தொகுதி எம்எல்ஏ தனவேலு அரசு மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை கூறினார். அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலையும் ஆளுநரிடமும் அளித்தார். இதனையடுத்து தனவேலு எம்எல்ஏ மீது மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அரசு கொறடா அனந்தராமன், சபாநாயகரிடம் புகார் அளித்தார். மேலும் தனவேலு காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Puducherry Congress MLA Dhanavelu appears before speaker

தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என தனவேலு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் எம்எல்ஏவின் முழுமையான விளக்கத்தை ஏற்ற பிறகே சபாநாயகர் நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தியது. தொடர்ந்து சபாநாயகரை சந்தித்த தனவேலு குறுக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர் வைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு வலியுறுத்தினார்.

இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக தனவேலு விவகாரத்தில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பாக இறுதி வாய்ப்பு அளிப்பதாகவும், தனவேலு ஆஜராகி விளக்கத்தை அளிக்குமாறு சபாநாயகர் மீண்டும் கடிதம் அனுப்பினார். அதன்படி இன்று தனவேலு, சபாநாயகரை அவரது அறையில் சென்று சந்தித்தார்.

அப்போது தனக்கு முழுமையான வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கொரோனா சூழலில் தனது வழக்கறிஞர் ஆஜராக முடியவில்லை. என் மீது குற்றச்சாட்டு கூறிய சாட்சிகளிடம் நேரடியாக குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார். இதை ஏற்று வேறொரு தேதி ஒதுக்குவதாக சபாநாயகர் தெரிவித்ததாக சந்திப்பிக்குபின் வெளியே வந்த தனவேலு எம்எல்ஏ தெரிவித்தார்.

Puducherry Congress MLA Dhanavelu appears before speaker

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சபாநாயகர் அவர் சொந்த விருப்பத்தின்படி நடக்கவில்லை என்று தெரிகிறது. யாரோ அவரை இயக்குகிறார்கள். தற்போது காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசலை மறைக்கவும்,
அதிருப்தி அமைச்சர்கள், எம்எல்ஏக்களை என் மூலமாக மிரட்டவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நடவடிக்கையை விட்டு, விட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். கொரோனா பாதித்துள்ள இந்த சூழலில் இந்த அக்கறையை மக்கள் மீது காட்ட வேண்டும்.

இன்னும் தேர்தலுக்கு குறுகிய காலம் இருப்பதால் கட்சி, ஆட்சி அதிகாரம் எல்லாவற்றையும் தன்கையில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று முதல்வர் நினைக்கிறார். அதற்காக முதல்படியாக மாநில கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து நமச்சியாவத்தை நீக்கிவிட்டு தன் கைப்பாவையாக இருப்பவரை தலைவராக போட்டிருக்கிறார். அவரின் இந்த நடவடிக்கையால் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தூள்தூளாகி விடும்.

புதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..பாதிப்பு எண்ணிக்கை 90 ஆக உயர்வு புதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..பாதிப்பு எண்ணிக்கை 90 ஆக உயர்வு

பசை போட்டு கூட ஒட்ட முடியாது. தற்போது முதல்வரின் தனிப்பட்ட நடவடிக்கையால் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், துணை சபாநாயகர் பாலன், ஜான்குமார், லட்சுமிநாராயணன் என அனைவரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். எனவே இவர்களை சரிகட்ட என் மூலமாக நடவடிக்கை எடுக்கின்றனர். இந்த ஆட்சி மீது மக்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். முதல்வர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருக்கு மக்கள் சரியான பாடத்தை தேர்தலில் புகட்டுவார்கள் என அவர் கூறினார்.

English summary
Congress legislator from Bahour constituency Dhanavelu on Wednesday appeared before Speaker Sivaklounthu and sought more time to give his explanation on the notice why action should not be taken against him under the anti-defection act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X