புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுவையில் காங்கிரஸை கழற்றிவிடுகிறது திமுக? என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி?

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு ரெங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. தமிழகத்துடன் சேர்த்து புதுவைக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

புதுவை திமுக வியூகம்

புதுவை திமுக வியூகம்

ஆனால் புதுச்சேரியில் திமுக கூட்டணி வியூகத்தை மாற்றி உள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. பலரும் பாஜக பக்கம் தாவக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காங்.கூட்டணி இல்லை?

காங்.கூட்டணி இல்லை?

புதுச்சேரி திமுகவினரோ, காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி வேண்டாம் என்கிற முடிவில் உள்ளனர். காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது புதுவை திமுகவினரின் கருத்து. இதனை திமுக தலைமையிடமும் வலியுறுத்தி உள்ளனராம் புதுவை நிர்வாகிகள்.

என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி?

என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி?

இதனடிப்படையில்தான் ஜெகத்ரட்சகனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தனித்தே களமிறங்கலாம் என முடிவெடுத்துள்ளதாம் திமுக. தேவைப்பட்டால் முன்னாள் முதல்வர் ரெங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்து கொள்ளலாம் என்கிற முடிவில் உள்ளதாம் திமுக.

தமிழக கூட்டணி

தமிழக கூட்டணி

புதுவையில் மேற்கொள்ளப்படும் வியூகத்தால் தமிழக கூட்டணியில் எந்தவித சலசலப்பும் வந்துவிடக் கூடாது என்பதிலும் திமுக கவனமாக இருக்கிறதாம். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கூட்டணிகள் இருப்பதைப் போலவே புதுவையில் ஒரு கூட்டணி; தமிழகத்தில் ஒரு கூட்டணி என்கிற வாதத்தை முன்வைத்து காங்கிரஸை சமாதானப்படுத்த முடியும் என்பதும் திமுகவின் கணக்கு என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

English summary
Sources said that If need Puducherry Dmk may join hands with NR Cong for the Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X