புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எட்டியே பார்க்காதீங்க..புதுவையில் சரக்குகள் மீதான கொரோனா வரி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரியை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

கொரோனா லாக்டவுனால் நாடு முழுவதும் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. மத்திய அரசு லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்திய போது மதுபான கடைகளும் திறக்கப்பட்டன.

Puducherry extends Corona tax on Liquor Products

ஆனால் மதுபான கடைகளை திறந்த பல மாநிலங்கள் புதியதாக கொரோனா வரி என மதுபானங்கள் மீது விதித்தன. இதனால் மதுபானங்கள் விலை மிக மிக கடுமையாக உயர்ந்தன.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மதுபானம் விலை குறைவாக இருக்கும் என்பதால் தமிழக குடிமகன்கள் அங்கு அதிகம் செல்வது வாடிக்கை. ஆனால் கொரோனா லாக்டவுன் காலத்தில் கொரோனா வரியுடன் மதுபான கடைகளை திறந்தது புதுவை அரசு.

கோவை: தலித் என்பதால் அலுவலகத்தில் பெயரை எழுதவிடாமல் தடுக்கிறார்கள்-பெண் ஊராட்சி தலைவர் பகீர் புகார்கோவை: தலித் என்பதால் அலுவலகத்தில் பெயரை எழுதவிடாமல் தடுக்கிறார்கள்-பெண் ஊராட்சி தலைவர் பகீர் புகார்

இதனால் புதுவையில் மதுபானங்கள் விலை தாறுமாறாக உயர்ந்தது. தமிழக மதுபான கடைகளின் விலைகளை புதுவையில் சரக்குகள் விலை கூடுதலாக இருந்தது. புதுவையில் 3 மாதங்களாக மதுபானங்கள் மீதான இந்த கொரோனா வரி அமலில் இருந்து வந்தது.

தற்போது மதுபானங்கள் மீதான கொரோனா வரியை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் வரும் நவம்பர் மாதம் வரை புதுவையில் மதுபானங்கள் விலை மிக கடுமையான உயர்வுடனேயே இருக்கும்.

English summary
Puducherry Govt has extended that Corona tax on Liquor Products for Three more months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X