புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா.. மீனவர்களுக்கு சோதனை மேல் சோதனை.. மீன் பிடி தடைக்காலத்தை ரத்து செய்ய கோரிக்கை!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் மீனவா்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா். மேலும் ஊரடங்கு உத்தரவு முடிந்ததும், தொடங்கும் மீன்பிடி தடை காலத்தை புதுச்சேரியில் அமல்படுத்தக்கூடாது எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரியில் காலாப்பட்டு, தேங்காய்த்திட்டு, வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், நரம்பை, பனித்திட்டு, குருசுகுப்பம் உள்பட 18 மீனவ கிராமங்களும், காரைக்கால் மாவட்டத்தில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரை 11 மீனவ கிராமங்களும் உள்ளன.

இந்த மீனவ கிராமங்களில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2 ஆயிரம் பைபர் படகுகள், ஆயிரம் படகுகள், நூற்றுக்கும் மேற்பட்ட பாய்மர படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் உள்பட மாநிலம் முழுவதும் மீன்பிடி தொழிலில் நேரடியாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், மறைமுகமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் சமூக தொற்று மூலம் பரவுகிறதா கொரோனா?.. பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு புதுச்சேரியில் சமூக தொற்று மூலம் பரவுகிறதா கொரோனா?.. பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு

தடைக்காலம்

தடைக்காலம்

புதுச்சேரி கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ந்தேதி முதல் ஜூன் மாதம்14 ந்தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளில் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

21 நாள் ஊரடங்கு

21 நாள் ஊரடங்கு

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் நாடு முழுவதும் வருகிற 14 ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கடந்த 23 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனிடையே ஊரடங்கு உத்தரவு முடிந்த மறுநாளே மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது.

வாழ்வாதாரம்

வாழ்வாதாரம்

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அடுத்தடுத்து வரும் தடைகளால், மீனவர்கள் அன்றாட தேவைகளுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் இந்த ஆண்டு மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வீராம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் சக்திவேல் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், புதுச்சேரியில் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலாம்

கொரோனா பரவலாம்

கடலில் மீன்பிடிக்க தடை இல்லை. ஆனால், மீனவர்கள் கடலுக்கு சென்று பிடித்து வரும் மீன்களை ஏலம் விடும்போது வியாபாரிகள் குவிவார்கள். அதன் மூலம் கொரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ளது. இது அரசின் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, ஊரடங்கு அமலுக்கு வந்த நாளில் இருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. வருமானமின்றி உள்ள மீனவர்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். மேலும் ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் தொடங்கும் மீன்பிடி தடை காலத்தை புதுச்சேரியில் அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

English summary
Puducherry fishermen's livelihood has been severely affected by coronavirus virus outbreak.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X