புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதுவையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 338 ஆக உயர்வு

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரே நாளில் அதிகபட்சமாக போக்குவரத்து உதவி ஆய்வாளர் உட்பட 52 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 338 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 52 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 338 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 200 ஆகவும் உயர்ந்துள்ளது. 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்

Puducherry gets 52 more cases today, Totally 338 cases

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறுகையில், புதுச்சேரியில் 52 பேருக்கு கொரோனா இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் 83 பேருக்கு பரிசோதனை செய்ததில் 28 பேருக்கும், ஜிப்மரில் 222 பேருக்கு பரிசோதனை செய்ததில் 22 பேருக்கும், காரைக்காலில் 69 பேரை பரிசோதனை செய்ததில் 2 பேருக்கு பாசிடிவ் வந்துள்ளது.

இதில் 38 பேர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியிலும், 12 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், காரைக்காலில் 2 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 58 வயதுடைய புதுச்சேரி வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ஒருவர் ஆவார். 16 பேர் முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனத்தையும் சேர்ந்தவர்கள்.

Puducherry gets 52 more cases today, Totally 338 cases

11 பேர் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். மற்றவர்கள் யாருடன் தொடர்பில் இருந்தனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். தமிழகத்தில் இருந்து 3 பேர் வந்துள்ளனர். காரைக்காலில் பரிசோதனை செய்த 69 பேரில் 35 பேர் சென்னையிலிருந்து வந்தவர்கள்.

சென்னையிலிருந்து வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 338 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் 161 பேர், ஜிப்மரில் 31 பேர், காரைக்காலில் 8 பேர் என மொத்தம் 200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Puducherry gets 52 more cases today, Totally 338 cases

இன்று கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் 8 பேர், ஜிப்மரில் 4 பேர் என 12 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் யாருக்கும் பாதிப்பில்லை.

Puducherry gets 52 more cases today, Totally 338 cases

புதுச்சேரியில் இதுவரை 11 ஆயிரத்து 992 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 11 ஆயிரத்து 486 பரிசோதனைகள் நெகடிவ் என்று வந்துள்ளது. 206 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன. சனி, ஞாயிறுகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை மிகவும் குறைக்க வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு.. மக்களை கஷ்டப்படுத்த கிடையாது.. எடப்பாடி பழனிச்சாமி பேட்டி கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு.. மக்களை கஷ்டப்படுத்த கிடையாது.. எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்து கொள்வது முக்கியம். இது தீவிரமாகவும், வேகமாகவும் பரவக் கூடிய நோய். வயது வித்தியாசமின்றி தாக்குகிறது. 3 மாத குழந்தைகளில் இருந்து 80 வயது முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நபர் வெளியே சென்று வருவதால் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களையும் கொரோனா தொற்று பாதிக்கிறது.

Puducherry gets 52 more cases today, Totally 338 cases

எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. புதுச்சேரி அரசு எடுத்து வந்த கடுமையான நடவடிக்கைகளால் இவ்வளவு நாள் குறைவாக இருந்தது. ஆனால், பொது முடக்கத்துக்கு பிறகு கடந்த 20 நாட்களில் ஒற்றை இலக்கத்திலிருந்து 300 ஐ கடந்துவிட்டது. எனவே, மக்கள் மிகவும் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என மோகன்குமார் தெரிவித்தார்.

English summary
Puducherry gets 52 more cases today, Totally 338 cases so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X