புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை முதல்.. ஏனாம் பிராந்தியத்தில் 3 நாள் ஊரடங்கு.. கொரோனா பரவல் அதிகரிப்பால் நடவடிக்கை

Google Oneindia Tamil News

புதுச்சேரி: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் அடுத்த 3 நாட்களுக்கு முழு ஊரடங்கிற்கு உத்தரவிடபட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கையானது குறையவில்லை. இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

Puducherry government ordered a full lockdown for the next 3 days in the Enam region

30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஏனாம் பகுதி ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ளதால் தற்போது அங்கு பாதிப்பு எண்ணிக்கையில் 274 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையை உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் (9.08.2020) மூன்று நாட்களுக்கு ஏனாம் பகுதியில் முழு ஊரடங்கை அமல்படுத்த பிராந்திய நிர்வாகி ஷிவ்ராஜ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவருக்கு கொரோனா.. மீட்பு படையினருக்கு பரிசோதனை செய்வது கட்டாயம் கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவருக்கு கொரோனா.. மீட்பு படையினருக்கு பரிசோதனை செய்வது கட்டாயம்

அதன்படி அடுத்த மூன்று நாட்களுக்கு ஏனாமில் அனைத்து கடைகளும் காலை 2 மணி நேரமும், மாலை 2 மணி நேரமும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் 24 மணி நேரம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Puducherry government has ordered a full curfew for the next three days in the Enam region due to the increasing incidence of corona. The incidence of corona is increasing day by day in the state of Pondicherry. The number of victims has not decreased despite various measures taken by the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X