புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுவையிலும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை- முதல்வர் நாராயணசாமி

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுவையில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Recommended Video

    புதுவையிலும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை - முதல்வர் நாராயணசாமி

    தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான நகரங்களில் அனைத்து மதவழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. மதுரை சித்திரைவிழா உள்ளிட்ட அனைத்து மத நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Puducherry Govt bans Ganesh Chaturthi celebrations

    இதேபோல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கும் தமிழக அரசு அனுமதி தரவில்லை. வீடுகளில் மட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக, இந்து முன்னணி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் அப்பாவை மீட்டெடுக்கும்... நன்றி சொல்ல வார்த்தையில்லை - எஸ்பிபி சரண்ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் அப்பாவை மீட்டெடுக்கும்... நன்றி சொல்ல வார்த்தையில்லை - எஸ்பிபி சரண்

    இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவை மாநிலத்திலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

    Puducherry Govt bans Ganesh Chaturthi celebrations

    புதுவை முதல்வர் நாராயணசாமி இன்று அளித்த பேட்டி:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொதுவெளியில் விநாயகர் சிலைகள் அமைத்தால் மக்கள் அதிகம் கூட நேரிடும். இதனால் கொரோனா நோய் தொற்றுக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது.

    இதனால் புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி மறுத்துள்ளது. ஆகவே தயவு செய்து விநாயகர் சிலையை மக்கள் தங்களது வீட்டில் வைத்து வழிபட வேண்டும்; கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.

    எனக்கும் இறை நம்பிக்கை உள்ளது. நானும் கோயிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றேன். ஆகவே கொரோனா நோய் தொற்றை கருத்தில் கொண்டு விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைக்கவோ, ஊர்வலமாக கொண்டு செல்லவோ கூடாது. பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    English summary
    Puducherry Govt also banned the Ganesh Chaturthi celebrations due to coronavirus lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X