புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேகமாக வந்தார்.. டாய்லெட்டை சுத்தம் செய்தார்.. அசர வைத்த புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர்..சல்யூட்!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் உள்ள கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கொரோனா காரணமாக 13,556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் ஆக்டிவ் நோயாளிகளாக 4,834 பேர் உள்ளனர். இதுவரை 8511 பேர் குணமடைந்து உள்ளனர். 211 பேர் பலியாகி உள்ளனர்.

 உண்மையான கொரோனா போராளி.. ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்று முதியவரின் உயிரை காப்பாற்றிய டாக்டர் உண்மையான கொரோனா போராளி.. ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்று முதியவரின் உயிரை காப்பாற்றிய டாக்டர்

படுக்கை வசதிகள்

படுக்கை வசதிகள்

அங்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக பலர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக படுக்கைகள் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு மேற்கொண்டார்

ஆய்வு மேற்கொண்டார்

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்,
கொரோனா வார்டிற்கு சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது. உணவு நன்றாக இருக்கிறதா? யாருக்கும் எல்லாம் மூச்சு விடிய சிரமமாக இருக்கிறது என்று கேட்டறிந்தார். சுமார் அரை மணி நேரம் அவர் நோயாளிகளிடம் பேசினார்.

கோபம் அடைந்தார்

கோபம் அடைந்தார்

அப்போது மருத்துவமனையில் கழிவறையை கூட சரிவர சுத்தம் செய்யப்படுவயில்லை என நோயாளிகள் சிலர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் புகார் அளித்தனர். இதை கேட்ட அமைச்சர் கோபம் அடைந்தார். அதோடு உடனே கொரோனா நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைக்கு சென்று அங்கு பார்வையிட்டார். கழிவறைகள் மோசமாக இருந்ததை பார்வையிட்டார்.

சுத்தம் செய்தார்

சுத்தம் செய்தார்

அதோடு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கழிவறை சுத்தம் இல்லாததை கண்டு தானே அதனை சுத்தம் செய்தார். இந்த சமபவம் மருத்துவமனை நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. அமைச்சர் ஒருவர் இப்படி கொஞ்சம் கூட யோசிக்காமல் கழிப்பறையை சுத்தம் செய்ததை அங்கிருந்த மக்கள் வரவேற்றனர். பிபிஇ உடையுடன் இவர் கழிவறையை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.

English summary
Puducherry Health Minister cleans toilet in a hospital after patients complaint about cleanliness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X