புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாமியார்-மருமகள் சாப்பாட்டை ஊட்டிக் கொண்டால் பில்லே கிடையாது.. புதுச்சேரி ஹோட்டல் அசத்தல் அறிவிப்பு

Google Oneindia Tamil News

புதுவை: புதுவையில் தொடங்கப்பட்டுள்ள ஹோட்டல் ஒன்றில் மாமியார்-மருமகள் ஒன்றாக சாப்பிட்டால் 50% கட்டணம் இலவசம், ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டால் 100% இலவசம் என்ற அறிவிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது..

புதுவை நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று படகுத்துறை அருகே தொடங்கப்பட்டுள்ள ஹோட்டல் ஒன்றில் வித்தியாசமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன..

Puducherry hotel will give food for free if mother-in-law and daughter-in-law feed each other

அதில், சாப்பிட வருபவர்கள் 100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்கு பிரியாணி மற்றும் காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் உள்ளிட்ட 20 வகை அசைவ விருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

Puducherry hotel will give food for free if mother-in-law and daughter-in-law feed each other

மேலும் மாமியார் - மருமகள் ஒன்றாக வந்து சாப்பிட்டால் அவர்களுக்கு 50 சதவீத கட்டணம் இலவசம். அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டால் முற்றிலும் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

Puducherry hotel will give food for free if mother-in-law and daughter-in-law feed each other

இந்த அறிவிப்பை பார்த்து இதுவரை 4 பேர் 100 திருக்குறளை ஒப்புவித்து பிரியாணி சாப்பிட்டு சென்றுள்ளனர். ஆனால் இதுவரை ஒரு மாமியார், மருமகள் கூட வரவில்லை..

Puducherry hotel will give food for free if mother-in-law and daughter-in-law feed each other

எழுத்தாளர் ஞானபானுவின் மகனான ஹோட்டல் முதலாளி நிருபன், தந்தையின் தமிழார்வத்தால் தூண்டப்பட்டு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக கூறியுள்ளார். மேலும் குடும்ப ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக மாமியார் -மருமகள் திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

Puducherry hotel will give food for free if mother-in-law and daughter-in-law feed each other
English summary
The announcement that if the mother-in-law and daughter-in-law will eat jointly 50% discount and 100% free if they feed each other at a hotel in Puducherry has taken everyone by surprise.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X