புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓவர் கமிஷன்.. ஸ்விக்கி, சொமாட்டோ, உபேர் ஈட்ஸ் நிறுவனங்களை புறக்கணிக்கும் ஹோட்டல்கள்!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: ஸ்விக்கி, சொமோட்டா, உபேர் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களில் அதிகப்படியான கமிஷன் வசூலிப்பதை கண்டித்து, புதுச்சேரியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட உணவகங்கள் இரண்டு நாட்கள் ஆன்லைன் ஆர்டர்களை நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் சேவை புதுச்சேரியில் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.

Puducherry hotels strike against online food firms

சுற்றுலா நகரமான புதுச்சேரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன. தற்போது தாங்கள் இருக்குமிடத்திலிருந்து விரும்பும் உணவகங்களில் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் ஸ்விக்கி, உபேர், சொமாட்டோ போன்ற தனியார் நிறுவனங்கள் மூலம் இருக்கும் இடத்திற்கே உணவு டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

Puducherry hotels strike against online food firms

உணவகங்களுக்கு சென்று சாப்பிடுவதைவிட ஆன்லைனில் விலை குறைவாக இருப்பதால் அகிகம்பேர் ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.

Puducherry hotels strike against online food firms

இந்நிலையில் அதிகப்படியான ஆன்லைன் டெலிவரி கமிஷனை தவிர்க்க கோரியும், டார்க் கிச்சனை புதுச்சேரிக்கு உள்ளேயும், வெளியேயும் அனுமதிக்ககூடாது என்பதை வலியுறுத்தியும், புதுச்சேரியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட உணவகங்கள் நேற்றும் இன்றும் இரண்டு நாட்கள் ஆன்லைன் ஆர்டர்களை நிறுத்தி வைத்து உணவக உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Puducherry hotels strike against online food firms

இந்த போராட்டம் காரணமாக புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மேலும் ஆன்லைன் வரத்தால் புதுச்சேரியில் 100 க்கும் மேற்பட்ட உணவகங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாகவும் உணவக உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

English summary
Puducherry hotels are on strike against Swiggy, Uber eats and other online eateries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X