புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவமானப்படுத்திவிட்டீர்கள்.. புதுச்சேரி வழக்கறிஞர் பார் கவுன்சிலிலிருந்து நீக்கம்.. திடுக் காரணம்!

புதுச்சேரி வழக்கறிஞரை நீக்கம் செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு அதன் ஒழங்கு நடவடிக்கை குழு உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

புதுச்சேரி: விபத்து வழக்கில் இழப்பீடாக வழங்கப்பட்ட 1.20 கோடி ரூபாயில் 66 லட்சத்தை கட்டணமாக வழங்க கேட்டு மிரட்டல் விடுத்த புதுச்சேரி வழக்கறிஞரை நீக்கம் செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு அதன் ஒழங்கு நடவடிக்கை குழு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் கடத்த 2000-ம் ஆண்டு நடந்த விபத்தில் தனது மனைவியை இழந்த ஆண்டனி என்பவரை புதுச்சேரியில் புதிதாக பதிவு செய்த வழக்கறிஞர் காந்தி தாஸ் அணுகி இழப்பீடு பெற்று தருவதாக கூறியுள்ளார்.அதன்படி, இது சம்பந்தமான வழக்கை தாக்கல் செய்ய ஆண்டனி அனுமதி வழங்கினார்.

Puducherry lawyer has been removed from the Bar Council from practicing

இந்த வழக்கில் ஆண்டனி மற்றும் அவரது குழந்தைகளுக்கு 1.21 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் 54.70 சதவிதம் தொகையான 66.15 லட்ச ரூபாயை தனக்கு கட்டணமாக வழங்க கேட்டு வழக்கறிஞர் காந்தி தாஸ், ஆண்டனியை துன்புறுத்தி மிரட்டியுள்ளார்.

உங்கள் பெயர் யாருக்கு தேவை.. தீர்வை சொல்லுங்கள்.. 3 மாநில தலைமை செயலாளர்களை தெறிக்கவிட்ட நீதிபதிகள்உங்கள் பெயர் யாருக்கு தேவை.. தீர்வை சொல்லுங்கள்.. 3 மாநில தலைமை செயலாளர்களை தெறிக்கவிட்ட நீதிபதிகள்

இதுகுறித்து ஆண்டனி பார் கவுன்சிலில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த பார் கவுன்சில் ஒழங்கு நடவடிக்கை குழு தலைவர் பிரசில்லா பாண்டியன் தலைமையிலான குழு, வழக்கறிஞர் காந்தி தாசை பார் கவுன்சிலில் இருந்து நீக்கும் படி பார் கவுன்சில் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கறிஞர் காந்தி தாஸ் அனைத்து எல்லைகளையும் மீறி வழக்கறிஞர்கள் தொழில் விதிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார் எனவும் அவர் வழக்கறிஞராக நீடிக்க தகுதி இல்லை எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடபட்டுள்ளது.

English summary
Puducherry lawyer has been removed from the Bar Council from practicing for collecting the high amount of fees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X